பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 83 கோவலனைக் கொல்லத் துணியவில்லை. இந்நிலையில் தீவினைமுதிர்வலை வேலை செய்யத் தொடங்குகிறது. அதுவே வந்த காவலருள் கல்லாக் களி மகன் ஒருவனைப் பற்றிக் கொண்டது. உடனே அக் களிமகன் தன் வாளால் கோவலனை வெட்டினான். கோவலன் வீழ்ந்து இறந்தான் என்று கூறவந்த ஆசிரியர், “மண்ணக மடந்தை வான்துயர் கூர, காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து”. (கொலை. 215.) என்று கூறுவதைச் சற்று நின்று நிதானித்துப் பார்க்க வேண்டும். கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தலின் வீழ்ந்தனன் என்பதால் அவன் இறப்பிற்கு அவனுடைய பழமை யான ஊழே காரணமாயிற்று என்பதை அறிய வைக்கின்றார். பாண்டியன் தவறுதான் இந்நிலைக்குக் காரணமாயிற்றோ என்று ஐயுறுவார் உண்டாயின் அவர்கட்கு விடை கூறுமுகமாகப் பண்டை ஊழ்வினை உருத்தலின் கோவலன் வீழ்ந்தனன்’ என்றார். எனவே பாண்டியன்மேல் முழுப் பழி சுமத்துவது பொருந்தாச் செயலேயாம். 'எய்தவனிருக்க அம்பை நோதல் ஆகாது’ என்னும் முதுமொழி நினைவிற்கு வரவேண்டிய நேரம் இது. அம்புதான் கொன்றது என்றாலும் எய்தவனே முழுக் காரணமாவான் வெறும் கருவியாக நின்று எய்தவனின் கருத்தை நிறைவேற்றி விட்டு அம்பு கொன்றது என்ற வீண் பழியையும் சுமக்கின்றது அம்பு. அதுபோல இப்பொழுது பாண்டியன் கருவியாக நின்று வீண்பழி சுமக்கின்றான். அவன் நேரடிக் காரணமாக இல்லாவிடினும் இப்பழி அவனை வந்து அடைவதே வினை விளை காலமாயிற்று” மன்னனுக்கு அந்த வினைவிளை காலம்'மற்றோர் எதிர்பாராத காரியத்தையும் செய்துவிட்டது. பொற்கைப் பாண்டியன் மரபில்