பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அ.ச. ஞானசம்பந்தன் வந்த ஒருவனுடைய செங்கோல் வளைந்தது என்ற பழியையும் வாங்கித் தந்துவிட்டது. இதனையே அடிகள் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்' என்கிறார். வளைஇய என்ற வினையெச்சம் செய்யிய'என்ற வாய்பாட்டினடியானது ஆகலின் வளையும்படியாக'(வளைவான் வேண்டி) என்ற பொருள்களைத் தந்து நிற்கின்றது. இளங்கோவடிகள் ஊழை அழைக்கும் இந்த நான்கு இடங்களையும் விரிவாகக் கண்ட இந்நிலையில் எந்த அடிப் படையில் ஊழைப் பயன்படுத்துகிறார் என்பதை ஒருவாறு அறிந்து கொள்ள முடிகின்றது. மனிதனுக்குப் பகுத்தறிவு என்று ஒன்று தரப்பெற்றுள்ளது. எனவே அதனைப் பயன்படுத்திச் செய்யத் தகுவன எவை, தகாதன எவை என்பதை அவன் அறிதல் வேண்டும். தகாதவற்றைச் செய்தால் அவற்றிற்குரிய தண்டனையை அல்லது பயனை அனுபவித்தே தீரல் வேண்டும். விஷம் உயிரைப் போக்கும் என்று அறிந்த ஒருவன் அதனை உண்டால் உயிர்போவது உறுதி. ஒன்று நஞ்சா இல்லையா என்பதை அறிய மனிதனுடைய அறிவு உதவுகிறது. இந்த அறிவு இல்லாத விலங்குகள் உற்றுணர்வின் மூலமே தங்கட்கு ஆகாத வற்றை அறிந்து கொள்கின்றன. மனிதனைப் பொறுத்தவரை இந்தப் பகுத்தறிவு அதிகச் சிறப்பைத் தருவதுடன் அதிகப் பொறுப்பையும், அதிகக் கடமையையும் தந்துவிடுகிறது. எனவே அவன் அறிவைப் பயன்படுத்தித் தீது ஒரீஇநன்றின்பால் உய்க்க (குறள் 422) வேண்டிய பொறுப்பு அவனுடையதாகிறது. அவனுடைய உணர்ச்சிகள் அறிவு அறிவுறுத்துவதற்கு எதிர்மாறானவற்றை விரும்புவதும் உண்டு. அத்தகைய சந்தர்ப்பங் களில் உணர்வுகளை அடக்கி அறிவு காட்டும் பாதையில் செல்ல வேண்டியது மனிதன் கடமையாகிறது. ஆனால் எல்லாராலும் எல்லாக் காலங்களிலும் இவ்வாறு செய்ய இயலுவதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் இரண்டு வகையில் நிகழ்ச்சி நடை