பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அ.ச. ஞானசம்பந்தன் காட்டில் மனைவியுடன் செல்லும்பொழுது கோசிகமாணி கொணர்ந்த ஒலையைப் பார்த்தவுடன் முதலில் கோவலனுக்குத் தோன்றிய எண்ணம் அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. உடன் உறைகாலத்து உரைத்த நெய்வாசத்துடன் (புறம் 83) கூடிய அவள் ஒலையைப் பார்த்தவுடன் அவனுக்கு உடனடியாகத் தோன்றிய எண்ணம் தன் தீது இலள்" (புறம்.94) என்பதாகும். எனவே அவன் சினம் இந்த இடைவெளி நாட்களில் தணியவில்லை என்று தெரிகிறது. இத்துணைக் குரோத மனப்பான்மை வருவதற்கு அவள் என்ன குற்றஞ் செய்தாள் என்று அவன் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. கற்றறிவுடைய ஒருவன் ஏன் இவ்வாறு செய்தான்? இந்த வினாவிற்கு இன்றாவது நம்மில் யாரேனும் தகுந்த காரணம் கூற முடியுமா? பல்லாண்டுகள் ஒருத்தியுடன் வாழ்ந்து, அவளிடம் ஒரு குழந்தையையும் பெற்றுவிட்டு அதற்குத் தன் குல தெய்வத்தின் பெயரையும் வைத்துவிட்டுத் திடீரென்று கானல்வரிப் பாடலைக் கேட்டவுடன. மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள்’ (கா.வரி 52) என்ற முடிவுக்கு வந்தால் என்ன செய்வது? ஏன் இந்த முடிவிற்கு வந்தான்? எவ்வாறு வந்தான்? அறிவால் ஆராய்ந்து வந்தானா?அனுபவத்தால் நாள்தோறும் கண்டு இம்முடிவிற்கு வந்தானா? பிறரிடம் இதுபற்றி ஆலோசித்து வந்தானா? இந்த வினாக்கள் ஒன்றனுக்காவது அன்றும், இன்றும் என்றைக்குமே யாரும் விடை கூறமுடியாது. இத்தகைய ஒரு குழ்நிலையில்தான் அடிகள் ஊழை இழுத்து வருகின்றார். கானல்வரி இன்றேனும் இது நடந்திருக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக யாழ் இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த தாகலின்” (கா.வரி 52) என்று