பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 89 களும் அதனைச் சுட்டுகிறார். ஏன் தேர்ந்து சொல்லவில்லை? மரண தண்டனை வழங்க முற்படும் ஒருவன் ஒரு வினாடியில் முடிவுக்கு வரலாமா? இப்படி முன்பின் ஆராயாமல் முடிவெடுப் பவன் எவ்வாறு அரசனாக இருக்கமுடியும் என்று வினாவத் தோன்றுகிறதா? அதற்காகவே அடிகள் இத்தனை பேருக்கும் வினை விளைகாலம் வந்துவிட்டதாகலின், அந்த வினைகள் ஒன்றுகூட முன்பின் யோசியாமல் அவனைப் பேசச் செய்து விட்டன என்கிறார். இறுதியாக உள்ள பகுதியில் விதியின் மற்றோர் விளை யாட்டைக் குறிக்கிறார் அடிகள். மன்னன் செங்கோலை வளைப் பதற்காகவே கோவலன் வெட்டுண்டான் போலும் என்று நாம் கருதும் வகையில் வளைஇய வீழ்ந்தனன் என்றார். ஆனால் உண்மை அதுவன்று என்கிறார் அடிகள். கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தலினால் வீழ்ந்தனன்” என்ற அடிகளால் இத்தவறான எண்ணம் வாராமல் தடுக்கிறார். அப்படியானால் அவன் மரணத்திற்கும் செங்கோலின் வளைவிற்கும் தொடர் பில்லையா எனில், காக்கை ஏறப் பனம்பழம் வீழ்ந்தது என்ற அளவில்தான் தொடர்பு என்று கொள்ளவேண்டும். செய்ய என்ற வாய்பாட்டிற்குச் செய்வான் வேண்டி என்ற பொருளுங் கூறலாம். அவ்வாறாயின் செங்கோலை வளைப்பான் வேண்டி வீழ்ந்தான் போலும் என்று நாம் எண்ணுமாறு செய்து விட்டது விதி தன் ஊழ்வினை உருத்தலின் வீழ்ந்தான் என்பது உண்மை. ஆனால் காண்பவர் செங்கோலை வளைப்பதற்காகவே வீழ்ந்தான் என்று சொல்லும்வண்ணம் நிகழ்ச்சி அமைந்து விட்டது. நிகழ்ச்சி தானாகவே அவ்வாறு அமைந்து விட்டதா? இல்லை. வினை விளைகாலத்தின் கோலம் இது எனக் குறிப்பால் உணர்த்துகிறார் அடிகள்.