பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அ.ச. ஞானசம்பந்தன் இதுகாறும் கூறியவற்றைக் கருத்திற்கொண்டு பார்த்தால் சில அடிப்படைகள் நன்கு விளங்கும் அர்த்தமற்ற சாதாரணச் செயல்கட்கும் அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் காரணகாரிய விளக்கம் தரக்கூடிய நிகழ்ச்சிகட்கும் இளங்கோ ஊழைக் காரணம் காட்டவில்லை. மனித அறிவின் எல்லையில் நின்று ஆராய்ந்து பார்த்தாலும் காரணகாரியத் தொடர்போ விளக்கமோ தரமுடியாத நிகழ்ச்சிகளைக் கூறும் பொழுதுதான் விதி அழைக்கப்படுகிறது. கணிதநூலர் காட்டும் (Law of Probability) க்கும் அப்பாற்பட்டதையே விதி என அடிகள் குறிக்கின்றார் என்பதை அறிய முடிகிறது. சிலம்பில் ஊழ் பலகாலம், பலகாலும் சிந்தித்துத் தெளிவு பெறவேண்டிய ஒரு பகுதியாகும்.