பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. அ.ச. ஞானசம்பந்தன் 'யான், எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” என்று தமிழ் மறையும் அற்றது பற்று எனில் உற்றது விடு” என்று வைணவ மறையும் அறுதியிட்டுக் கூறுகின்றன. எனவே, பற்றற்ற நிலையில், அகங்காரம் எனப்பெறு வதாகிய யானும், மமகாரம் எனப்பெறுவதாகிய எனதும் அழிந்த நிலையில், வீடு கைமேற் கிடைக்கும் என்ற கருத்தை அறி கின்றோம். மிகப் பழமையானதாகிய தமிழ் மறையும், இடைக் காலத்ததாகிய வைணவ மறையும் இந்த ஒரே கருத்தை வலி யுறுத்திச் சொல்கின்றமையால் இக் கருத்து, மிகப் பழைய காலந்தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கிவந்த ஒன்று என்று நினைப்பதில் தவறில்லை. ஒருவன் எத்துணைச் சிறப்புடையவனாயினும் அவன் பிறப்போடு ஒன்றியுள்ள அகங்காரத்தை அறவே அறுத்து அகற்றினாலொழிய, வீடுபேற்றைக் காணுமாறு இல்லை. செம்பில் இயல்பாகவே கூடியுள்ள களிம்பைப்போல ஆன்மாவைப் பற்றி நிற்கின்ற இந்த ஆணவம் அல்லது அகங்காரம் என்னும் களிம்பு எளிதில் போக்கக்கூடியது அன்று புளி முதலியன கொண்டு வேறு ஒரு கர்த்தா முன்னின்று நீக்கும்பொழுது செம்பில் உள்ள களிம்பு நீங்குவதுபோல, ஆன்மாவைப் பற்றியுள்ள அகங்கார மாகிய களிம்பும், விஞ்ஞானம் அல்லது அறிவு விளக்கம் என்னும் புளி கொண்டு பிறிதொரு கர்த்தாவால் நீக்கப்பெறும்பொழுது தான் நீங்குகிறது. - மனிதனிடத்திலுள்ள பிற குற்றங்களைக் களைவதைவிட இந்த ஆணவமாகிய குற்றத்தைக் களைதல் மிகமிகக் கடின மானதாகும். ஒருசில குற்றங்கள்களையப்பெற்றவுடன் அறுதியாக நீங்கிவிடுகின்றன. இன்னும் சில குற்றங்களைக் களைய முயன் றால், உள்ளேயே அடங்கி நின்று தலைகாட்டாமல் அடங்கி விடு கின்றன. இன்னும் சில குற்றங்கள் ஒயாது போக்கினாலொழிய