பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அ.ச. ஞானசம்பந்தன் ஆணவத்தை எத்துணை முறைகள் போக்கினாலும் அது தலைதூக்கி எழும் என்பதையும் மெய்யுணர்வு என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தினால் தான் இறுதியாக அதனை வெல்ல முடியும் என்பதனையும் கந்தபுராண வரலாறு காட்டி நிற்கின்றது. சூரபதுமனுடையதலை (அகங்காரமே சூரபதுமனாக உருவகிக்கப் பெற்றான்) பன்முறை வெட்டப்பட்டும் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்தது என்றும் இறுதியாக முருகனுடைய ஞானவேவின் மூலமாக அழிந்தது என்றும் கதை கூறுகிறது. அந்த வேலாயுதம்கூட ஆணவத்தின் வடிவாகிய சூரபது மனை ஒருசேர அழிக்காமல், மயிலாகவும் கோழியாகவும் ஆகுமாறு செய்தது என்றும் அதே கதை கூறிச் செல்கிறது. எனவே, அகங்காரத்தை அடக்க வேண்டுமானால் மெய் உணர்வு என்னும் ஞானவேலினால்தான் முடியும் என்பதும், அந்த ஞானவேலுங்கூட அகங்காரத்தை அழிக்காமல் மயில் என்ற விந்துத் தத்துவமாகவும், கோழி என்ற நாதத்' தத்துவமாகவும் மாறச் செய்கின்றது என்பதும் நன்கு விளங்கும். இவ்வுலகம் முழுவதுமே நாதம், விந்து என்ற இரண்டு தத்துவங்களின் கூட்டுதான் எனின் ஆணவம் (குரன்) மறைந்து நாதம் (கோழி, விந்து (மயில்) தத்துவங்களாக ஆயிற்று என்றால் - அதன் அடிப்படையை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். தான் என்ற அகங்காரம் மறைந்தால் உலகம் என்ற பன்மைதான் அங்குத் தோன்ற முடியும். தன்னலம் என்பது அழியும்பொழுது பிறநலம் என்பது வெளிப்படுவதுபோல அகங்காரம் மறையும் பொழுது, அங்கே உலகம் (நாதமும் விந்துவும் அல்லது கோழியும் மயிலும்) தோன்றக் காண்கிறோம். தான் என்ற ஒன்றைத் தனியே நிறுத்திக் காண்பது அகங்காரமாகும். உலகம் முழுவதிலும்