பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 95 இறைவனைக் காண்பவன் அஃதாவது ஆன்ம வெளிப் பாட்டையே காண்பவன் அகங்காரமற்றவனாகிறான். இந்த அடிப்படையை மனத்திற்கொண்டு பார்த்தால், சாதாரண மனிதராகப் பிறந்தோரும் மெள்ள வளர்ச்சி அடைந்து, தெய்விகத் தன்மையைப் பெற முடியும் என்பதை நன்கு அறி கிறோம். எனினும், இத் துறையில் முன்னேறுகின்ற ஒருவனுக்கு எதிரியாக நிற்கின்ற தடை, மூன்றாவது மலமாகிய ஆனவமே என்பது நன்கு விளங்கும். சைவ சமயத்திற்குரிய தனிப்பட்ட கருத்து என்று இதனைக் கொள்ளாமல், பொதுவாக இத் தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் வழங்கி வந்த தத்துவக் கொள்கை என்பதை மனத்திற்கொண்டு கண்ணகியின் வரலாற்றைக் காண்போமாக, தொடக்கத்திலிருந்தே அப் பெருமாட்டி நற்பண்புகள் அனைத்திற்கும் உறைவிடமாகத் திகழ்கின்றார். வடிவாலும் அக அழகாலும் சிறந்து நிற்கின்ற அவரை "போதிலார் திருவினாள் புகழுடை வடிவு” உடையாள் என்று மக்கள் போற்றுகின்றார்கள். அவரை, மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, மலையிடைப் பிறவா மணியே, யாழிடைப் பிறவா இசையே” என்றெல்லாம் கணவன் பாராட்டுகின்றான். காட்டில் வரிக் கூத்தில் ஈடுபட்டுள்ள வேடுவர்கள், கணவனோடிருந்த மனமலி கூந்தலையுடையவளாகிய அப் பெருமாட்டியைக் கண்டு, இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப் பாவை செய்த தவக் கொழுந்து, ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கியதிருமாமணி”என்று போற்றுகின்றனர். முற்றத் துறந்த கவுந்தி அடிகளோ எனில், “கற்புக்கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்"என்று புகழ்கிறார்.