பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஞ்சுளா இன்னமும் வரக் காணுேமே?... மேஜை மீதிருந்த ைடம் பீ ஸ் அவன் பார்வையில் சுழன்றது. பொட்டுப் பொட்டாக நீர்மணி கள் சிந்தின; சிதறின. ஏதேதோ நினைவுகள் எப்படி எப்படியோ அவனை அலேக்கழித் திருக்க வேண்டும். நெஞ்சம் குலுங்கியது; நலிந்து மெலிந்த இடதுகை, இரு தயத்தைத் தடவிக் கொடுத்தது. புரண்டு படுத்தான், அவன். அவன்: குமார். படுக்கை நொந் ததோ? பட்டு மெத்தையில் அவன் நெஞ்சு ஒட்டட்டுமென்று காத்தி குந்தமாதிரி, இருமல் ஆழமாகவும் அழுத்தமாகவும் மூர்த்தண்யமாக வும் புறப்பட்டது. தரைமீனகத் துடிதுடித்தவகை, மஞ்சு' என்று முனகியவண்ணம் வி தி ைய க் கண்டு பயந்தவன் மாதிரி மல் லாந்து படுத்துக் கொள்ள முயற்சி செய்யலாளுன் குமார். மூச்சுவாங் கியது; வேர்வை துளித்துளியாக நெற்றிமேட்டிலும் மார்பிலும் சரம் கட்டத் தொடங்கியது. கண்கள் இருண்டன. தெய்வமே' மஞ்சள் வெய்யில் விளையாடி யது, மணி ஆறு. அடுத்து 'டிோஸ் மருந்து அருந்த வேண்டும். 7 மருந்துச் சிசாவை குமார் விர தியோடு நோக்கினன், அவனு டைய பார்வையில் ஏக்கம் நெடு மூச்செறிந்தது. ஒரு வாரத்துக்கு முந்திவரையிலும் மஞ்சு - என் மஞ்சு எனக்கு மருந்து கொடுப்ப தற்கென்று சொல் லிவச்ச மாதிரி ஆறுமணிக்கெல்லாம் டாண்ணு ஆபீஸிலேருந்து வந்து இங்கே நிற்பாளே!...” பைகிராப்ட்ஸ் சாலேக்கென்று இப்படியொரு பயங்கரச் சந்தடி யா? மஞ்சுளா இன்றும்கூட இன்ன மும் ஏன் வரக்காணுேம்? உயிரைப் பிடித்துக் கொண்டு மெல்லத் தலேயைத் துர்க்க முயன்ற குமார் மறுகணம் ஏனே ஒருகளித்துப் படுத்துக்கொண் ட்ான். மருந்துப்புட்டியும் அவுன்ஸ் க்ளாஸாம் இப்போது அவன் பார்வையினின்றும் ம ைற ந் து விட்டன. பிரமை தட்டியவன் போல்அவன் சாய்ந்து கிடந்தான். நினைவுகள் திசைகூடி, திசை பிரிந்து ஆலவட்டம் சுற்றின போலும்! எதை நினைப்பான்? எதை மறப்பான்? மஞ்சுளா..? - கு ம f ன் வெளுத்த உதடுகளில் மஞ்சுளா ஊர்ந்தாள். தோல் உரித்து காய்ந் 97