பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பட்டுடுவீங்க. நியாயமான கோரிக்கைகளுக்குத் தெய்வம் கட்டாயம் செவிசாய்க்குமுங்க, அத்தான்!" அன்ருெரு நாள் எத்துணை பான்மையுடன் செப்பினுள் மஞ் சுனா! என்னவோ படபடத்த சத்தம் கேட்கிறதே! திரும்பின்ை குமார். மஞ்சுளாவின் அத்தான் டாக் டர் சாந்தமூர்த்தி அமெரிக்கா விலிருந்து எழுதிய கடிதம் அது. அந்தக் கடிதம் வீட்டு விலாசத் துக்கு வந்திருந்தது. அலுவல் முடிந்து முதலிலே வந்த குமார் அதைப் பார்த்தான். உறைக் கடிதம் அவனுக்கு விவரம் குறித் துக் காட்டியது. பணி முடிந்து மீண்ட தன்னுடைய இன்னுயிர்த் துணையிடம் நீட்டின்ை கடிதத் தை. அவள் அழகான புன்னகைக் கோலம் ஏந்தி அக்கடிதத்தை அவனிடமே திருப்பிக் கொடுத் தான். 'நீங்கள் படிச்சிப்பாருங்க, அத்தான்!' என்ருள். 'இது உனக்கு வந்த தபா லாச்சே, மஞ்சு?” 'எனக்கு வந்திருந்தால் என்ன வாம்? ம்... பிரிச்சுப் படியுங்க!” நிஷ்களங்கத்தோடும் பச்சிளங் குழவியின் கெஞ்சுதலோடும் அவள் வேண்டும்போது, அவளுல் மறுக்கக் கூடுமா? தெரிந்தே இனம் புரியாமல் தவறு செய்வது போன்றதொரு மனவுணர்வுடன் அவன் கடிதத் தைப் பேசச் செய்தான். சாதாரணக் கடிதம் அது. ஆனல் அன்பு சாதாரணம் அல்லவே? அமெரிக்காவிலிந்து தாயகம் திரும்பும் செய்தியை எழுதியிருந் தார் டாக்டர் சாந்தமூர்த்தி. ‘அத்தான், எ ன் .ே ைட டாக்டர் அத்தானுக்கு என்மீது எத் தகன அன்பு பார்த்தீங்களா?” என்று நளினம் சிந்திச் சிரிப்பைச் சிந்தினுள் மஞ்சுளா, அவனும் தன் நோயை மறந்து சிரிக்கத் தவறவில்லேதான் டாக்டர் சாந்தமூர்த்தி ஒரு காலத்தில் மஞ்சுனாவைக் கரம் பற்றத் தவம் இயற்றியது கனவல் லவே, கதையல்லவே! "ேமிஸ்டர் குமார், நான் உங்களே மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். இந்தக் காதலுக்கு நம் இருவரு டைய மனங்களும் ஒன்றுபட்டது மாத்திரம் காரணமல்ல; நம் முடைய அந்தஸ்தின் சூழலும் அ னு ச | ண ய க இருப்பதும் காரணமாகும். என்னுடைய டாக்டர் அத்தானுக்கு என்னேக் காட்டிலும் உயர்ந்த இடத்துப் .ெ ப ன்ை தா ன் மனைவியாகும் பாக்கியம் பெற வேண்டும்!" சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய அனைத்துக் கல்லுரரிப் பேச்சுப் போட்டியில் குடிார் முதற்பரிசையும், மஞ்சுளா இரண் டாம் பரிசையும் பெற, அந்த வெற்றித் தொடர்பின் அறிமுகத் தில் கனிந்த காதலுக்கு அவனைப் போலவே அவளும் ஆத்ம சமர்ப்பணம் செய்ய முன்வந்த நேரத்தில் அவன் பேசிய இந்தப் பேச்சு அவனைப் பொறுத்தமட் டிலே விந்தையாகவே பட்டது: நெஞ்சம் நெக்குருதின்ை! 99