பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான். இப்போ நீங்க என்னசொல் lங்க??’ என்று நா தடுமாற வின விள்ை. மாரகச்சேலே நழுவத் துடித்தது. ஜாதிமல்லி மணத்தது. மஞ்சு ராத்திரிநீ படிச்சுக்காண் பித்த அந்தக் கதையிலே வரு கிற மஞ்சுளாவாக நீ ஒரு போது மே இருக்கமாட்டாய் என்கிற அந்தரங்கத்தை என்ைேட மனச் சாட்சி தீர்க்கமாக உணர்ந்திருந் தும்கூட, உன்ைேட இந்தக் கடு தாசி என்னே ஒருகணம் தடுமாறச் செஞ்சிட்டுதே, மஞ்சு? என்ைேட கண்கண்ட தெய்வத்தைத்தவருக நினைக்கத் துணிஞ்ச நான் மகா பாவி! கேவலமான அற்பன் நான்! பெரிய மனசு வச்சு என்னைத் தயவு பண்ணி மன்னிக்க மாட்டி யா, மஞ்சு?' தேம்பினன் குமார்.

  • அத்தான்!" என்று கதறிள்ை மஞ்சுளா. 'தெய்வத்தை பக்தை மன்னிப்பதா? அப்படியெல்லாம் நீங்க சொல்லலாமா? நான் ராத் திரி படிச்சுக்காட்டின கதையிலே வருகிற அந்த மஞ்சுளாவாக நான் ஒரு போதுமே மாறமாட்டேன் என்கிற உண்மையை-சத்தியத் தை போலவே நீங்களும் நிச்சயம் புரிஞ்சுகிட்டிருப்பீங்கன்னு நானும் உணர்வேனுங்க. கதையிலே வரு கிற மஞ்சுளா தன்னுடைய நோ யாளிக் கணவனைச் சுமையாகக் கருதிளுள். அது அவள் மனச் சாட்சியின் பிழை; விதியின் பிழை யாகவும் இருக்கலாம். தன் நோ யாளிக்கணவன் சுமையாக இருக் குமளவுக்குக் கதையைக் கதாசிரி யர் யதார்த்தப் போக்கிலே கொண்டு செலுத்தி எழுதியிருந் தார். அந்த ஒரு திறமையை வியந்துதான் அந்தக் கதை எனக் குப் பிடித்ததாகவும் நான் சொன் னேன்! ஆனல் அந்தக்கதையிலே வரக்கூடிய அந்த மஞ்சுளாவை

எனக்குப் பிடிச்சதாகச் சொல் லவே இல்லே! வாழ்க்கையை விளையாட்டின் னு சொன்னுல், அந்த விளையாட்டிலே விதி என் கிற ஒரு விசித்திர சந்திக்கும் பங்கு இல்லேன்னு சொல்லவே முடியிலே!’ மூச்சு வாங்கியது. நீலப் பாதரச ஒளியில்ஒளிவிழிகள் பளபளத்தன. "அப்படியா?? ஆமாங்க, அத்தான். இல்லையா ல்ை, நான் புதிசாக வாங்கிவந்த பேன நன்ருக எழுதுதான்னு பரீட்சை செய்து பார்க்க, ராத்திரி உங்களிடம் படிச்சுக்காட்டின அந்தக்கதையிலே வருகிற கடிதத் தையே காப்பியடித்து நான் ஏன் எழுதப்போகிறேன்? அ ந் த க் கதையின் நாயகியின் பெயரும் மஞ்சுளா என்று ஏன் அமைந்தது. எழுதின கையோடு அந்த லெட்ட ரைக் கிழிச்சுப் ேப ா ட ணும்னு நினைச்சப்போ, நீங்க பலமாக இருமவே, உங்களைக் கவனிக்க ஒடியாந்திட்டேன். அந்தக் கடு தாசி விஷயம் கொஞ்சநேரம் முந் திதான் எனக்கு ஞாபகமே வந்திச் சுங்க அத்தான்! என்ைேட சிறு பிள்ளேத்தனமான விளையாட்டு விஷப் பரீட்சையாகிடப் படாதே அப்படின்னு தெய்வத்தை வேண் டிக்கிட்டு டாக்ளியிலே பறந்துவந் தேனுங்க அத்தான், வெறும் நடைப்பிணமாக ... நல்லகாலம், என் உயிர் பிழைச்சிட்டுது!... "மோனம் பிழைச் சுட்டுது!...” அந்தக் கடிதம் இப்போது சுக்குநூருகிப் பறந்தது. 'மஞ்சு!...” 'அத்தான்!” என்று ஆன்ம நேயப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணிர்சொரிந்தவளாக, டம்பப் பையினின்றும் புத்தம் புதிய கரன்ஸிநோட்டுக் கட்டு ஒன்றை எடுத்து அவளுடைய அவனிடம் சமர்ப்பித்தாள் மஞ்சுளா குமார். "மஞ்சு!... 104