பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டுணர்ந்து பாடுகின்றவன் கவிஞன் படைப்பில் கவிதை பொதிந்திருப்பதைவிட, தன் முன் விரிந்த படைப்பில் மூழ்கிய கவிஞனின் வியப்பில், மனவிரிவில் கவிதை பொதிவாகி யுள்ளது எனலாம். கவிஞனின் உலக அநுபவம் கற்பனை; உலகத்தாரின் கற்பனை மொழி-அநுபவம், கவிதைl மனிதன் கவிதையில் வாழ்வைத் தேடுகிருன்; கவிஞன், வாழ்வில் கவிதையைத் தேடுகிருன். இருவகை நாட்டங்களுக்குமிடையில் வாழ்வுக்கும் கவிதைக்கும் ஊடகம் அமைக்கும் வகையில் அமைவது பண்பட்ட மொழி. அம்மொழிக்கு மக்கள் தொடர்ச்சி' தருகின்றனர்; கவிஞன்” நிலைபெற்ற வடிவ வாழ்வைத்' தருகின்ருன். அதில்தான் மொழியின் பயனும் வாழ்வின் பயனும் அமைந்திருக்கும். அவ்வமைப்பில், மனிதரில் கவிஞனின் தகுதி-நிலை என்ன என்பதை அறியாதார், வியப்புக்களில் ஒரு வியப்பை அறியாதாரே! தாகூரைச் சந்தித்து உரையாடிய பின்னரே வானம் மேலும் விரிவுடையதாகத் தோன்றுவதை உணர்கின்றேன் என்ருர் ஓர் அறிஞர். மனிதனின் உணர்வுக்கும் கவிஞனின் உணர்தல் திறனுக்கும் உள்ள பெரியதொரு வேறுபாட்டை இது காட்டுகின்றது. உணர்வு மிதப்பில்-உணர்வு மீறிய சிலிர்ப்பில் ஏற்படும் கலேயனுபவத்தைத்தான் கவிஞன் மொழியில் உதிர்த்துப் பதித்துத் தருகின்றன். கவிதை என்ருல் என்ன? மனிதனே நாக்கி, "இனிமேல் வானவில்லேக் கண்டால் நான் சொல்லும் படியெல்லாம் வண்ணப் பொலிவிருக்கிறதா என்று பார்த்துப் பாராட்டு’ என்று கவிஞன் சொல்வதும் ‘இனி எப்போதாவது ஆதரவற்ற பிச்சைக்காரியைக் காண நேரிட்டால் பரிவு காட்டு' என்று கவிஞன் பேசுவதும் தானே?- பாராட்டத் தெரிந்து கொள்- பரிவுகாட்டப் பழகு என இருதிறப்பட்ட உணர்வுகளை-இன்னபிற சுவடுகளே நினைவில் ஆழப்பதிப் பதே கவிஞனின் பணி என்ருலும், இதில் என்னபிழை?!