பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டே வந்தது. பத்தாவது மாதம் முதல் நாள் அன்று தான் ம&லயின் உச்சி கண்ணுக்குத் தெரிந்தது. நாற்பது நாட்கள் ஆனபின், நோவா தான் செய்த மரப்பேழை யின் சாளரத்தைத் திறந்தான். அந்தச் சாளரத்தின் வழியாக அவ ன் அண்டங் காக்கையை வெளியில் அனுப்பினன். அது உலகின் மேற்பரப்பில் உள்ள நீர் வறளும் வரை அங்குமிங்கும் பறந்து கொண்டேயிருந்தது. நீர் வற்றிவிட்டதா என்று பார்த்து வர அவன் ஒரு புருவை வெளியில் அனுப்பின்ை.உலகைச் சுற்றிப் பறந்து திரும்பிய அந்தப் புரு கால்வைக்கச் சிறிது இடங் கூடக் காணுமல் பேழைக்குத் திரும்பி வந்தது உலகம் முழுவ தும் அப்போதும் தண்ணிரினடி யில் அமிழ்ந்திருந்ததையறிந்த நோவா தன் கையை நீட்டிப் புரு வை உள்ளுக்கு இழுத்துக் கொண் டான். ஏழு நாட்கன் காத்திருந்த பிறகு புருவை மீண்டும் வெளியில் விட் டான். அன்று மாலேயில் புரு திரும்பி வந்த போது அதுதன் வாயில் ஒர் ஆலிவ் இலையைக் கெளவிக் கொண்டுவந்தது. நீர் வற்றிவட்டது என்பதை நோவா அறிந்து கொண்டான். மேலும் ஏழுநாட்கள் சென்ற பிறகு அவன் மீண்டும் அந்தப் புருவை வெளியில் விட்டான்.அது அவனிடம் திரும்பி வரவேயில்லே. அவனுடைய அ று நூ ற் றி யொன்ருவது ஆண்டின் முதல் மாதம் முதல் நாளன்று உலகப் பரப்பின்மீது நீர் முழுவதும் வற்றி மண் நன்ருகக் காய்ந்துவிட்டது. பேழைக்கதவைத் திறந்து பார்த்த நோவா தரை காய்ந்திருப்பதைக் கண்டான், இரண்டாவது மாதம் இருபத்தி ஏழாவது நாளன்று ஈரம் சிறிது மில்லாமல் மண் உலர்ந்து விட் والتي يسا அப்போது கடவுள் நோவா வைப் பார்த்துப் பேசினர். பேழையிலிருந்து எல்லோரும் வெளியில் செல்லுங்கள். மிருகங் களும், பறவைகளும், ஊர்வனவும் ஆகிய எல்லா உயிர் இனங்களையும் வெளியில் கொண்டுவா. எல்லாம் உலகில் நன்ருக மேய்ந்து, வன மாக வாழ்ந்து பல்கிப் பெருகி வாழட்டும்’ இறைவன் கட்டளேப்படியே, நோவாவும் அவன் மக்களும், அவன் மனேவி ம் அவர்கள் மனை விமார்களும் வெளியில் வந்தார் கள். உயிரினங்கள் யாவும் பேழை யிலிருந்து வெளிப்பட்டன. நோவா இறைவனுக்காக ஒரு பீடம் காட்டினன். தூய்மையான மிருகங்களையும், தூய்மையான பறவைகளையும் எடுத்து, அந்தப் பீடத்தின் மேலிட்டு அவற்றைச் சுட்டுப் பலி கொடுத்தான். இறைவன் ஓர் இனிய மணத்தை நுகர்ந்தார். 'நான் மனிதனுக்காக மறுபடி யும் உ ல க த் ைத ச் சபிக்க மாட்டேன். மனிதனுடைய உள் ளத்தில் தோன்றும் மனுேபாவம் அவனுடைய இளமைப் பருவத்தி லிருந்தே தீயதாக இருந்த போதி லும் உலகை அழிக்கமாட்டேன். இப்போது செய்ததுபோல் மீண் டும் உயிர் வாழ்வன எல்லாவற். றையும் கொன்ருெழிக்க மாட் டேன்' என்று இறைவன் தம் உள்ளத்துக்குள்ளே சொல்விக் கொண்டார். 'உலகம் நிலையாயிருக்கும் நட வும் அறுவடையும், குளிரும், வெப் பமும், கோடையும் வேனிலும், , 111