பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசித்தழுத குழந்தை பால் குடிக் கிறது. பின் அது தூங்குவதற்காக அழுகிறது. பட்டுத் துணியால் தொட்டில் கட்டி அதில் தன் குழந் தையைப் படுக்க வைத்து, பாட்டுத் தமிழால் பாராட்டித் தாலாட்டி மகிழ் கிருள் அன்னே. 3. தாலோ தாலேலோ. எண்ணி யெண்ணித் தவமிருந்தே இன்பக் கனவு பலகண்டே வண்ணச் சிலேயாய்ப் பெற்றெடுத்த வைர மணியே தாலேலோ உண்ணும் சோறும் உனக்காக உயிரும் வாழ்வும் உனக்காக கண்ணின் மணியே தாலேலோ கட்டிக் கரும்பே தாலேலோ, 'அம்மா அம்மா’ என்றே நல் அமுதக் குரலில் அழைத்துளத்தில் சும்மா சும்மா தேன்பாய்ச்சும் சுடர்வி ளக்கே தாலேலோ. இம்மா நிலத்தில் உனக்கானும் இன்பம் ஒன்றே பேரின்பம் என்மா தவமே தாலேலோ இன்ப மணியே தாலேலோ, கண்டு .சிரிக்கும் கற்கண்டே கனிவாய் மழலைச் சொற்கண்டே வண்டு விழியே பூச்செண்டே வண்ணத் தமிழே தாலேலோ எண்ணம் இனிக்கப் பிறந்தாய் நீ ஏற்றம் சேர்க்கப் பிறந்தாய்நீ கண்ணே தாலோ தாலேலோ கனியே தாலோ தாலேலோ. 118