பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்ந்த அன்பு எங்கே விளங்குகிறதோ அங்கே, முத்தம் பிறக்கிறது. அன்பு நிறைந்த உள்ளத்தால் தன் குழந்தையை உச்சி மோந்து முத்தமிட்டு மகிழுகின்ற தாய், திரும்பவும் அந்தக் குழந்தையின் சின்னஞ் 2. சிறிய செம்பவழ வாயால் முத்தம் பெற்றுத் 2 స్త్ర) தன் இன்பத்தை முழுமையாக்கிக் கொள்ளு .父やす கிருள் ހަZ 5. முத்தந்தா நீ முத்தந்தா சொல்லச் சொல்லப் பயின்றுகொளும் சோலக் கிளியே என்னுயிரே வெல்ல மழலை மொழிபேசி விரியும் திருவாய் முத்தந்தா செல்லத் தமிழே கனியுதடு சிவக்கச் சிவக்க முத்தந்தா செந்தேன் மலரே கனியுதடு சிவக்கச் சிவக்க முத்தந்தா . தவழ்ந்து தவழ்ந்து வந்துளத்தில் தழையும் அன்புத் தளிர்க்கொடியே அவிழ்ந்து அவிழ்ந்தே இதழ்விரியும் அழகு மலரே முத்தந்தா, பவழச் செவ்வாய்க் கனியுதடு பதித்தோர் இன்ப முத்தந்தா. பால்வழி யும்வாய்க் கனியுதடு பதித்தோர் இன்ப முத்தந்தா. எல்லே யில்லாப் பேரின்ப எழிலோ வியமே காவியமே தொல்லே மறந்து வாழ்வினிலே சுகத்தைக் காணச் செயப்பிறந்த முல்லேப் பூவே செங்கனிவாய் முத்தந் தாநீ முத்தந்தா முருகு விரியும் செங்கனிவாய் முத்தந் தாநீ முத்தந்தா. 120