பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಕ್ಷೌನ್ಟೌ జౌన్స్)ఖిస్క్ర? நூல்களெனும் நண்பர்களே! உலகைக் காட்டும் நுணுக்கமிகு சன்னல்களே! காலத் தேரின் கால்வழியின் சுவடுகளைப் படமாய் ஆக்கிக் கண்முன்னல் திரையிட்டுக் காட்டு கின்றீர்! நால்வகைப்பூ இதழ்களுக்குள் தேனி மூழ்கி நாவினிக்கும் தேனடையை உருவாய் ஆக்கும்; வால்அறிவு பெறவேண்டின் நூல்க ளே,உம் மடியினிலே நாங்களெலாம் மூழ்க வேண்டும்! என்றைக்கோ செத்தவரை எங்கள் முன்ல்ை எழுப்பிவந்து நிறுத்திவைத்துப் பேச வைப்பீர்! என்றைக்கோ நிலவினில்நாம் உலவப் போகும் எழிற்கனவைச் சுவையுடனே எடுத்துச் சொல்வீர்! தென்றல்தொட்டே இதழ்விரியும் மலர்க ளெல்லாம் சிரிக்கின்ற காலமிங்கே ஒருநாள் தானே! என்றென்றும் அறிவுமணம் வீசு கின்ற ஏடுகளே! உங்களுக்கோ மரணம் உண்டா? துன்பத்தில் ஆடுகின்ற இதய ஒடம் தொலைதூரக் கடல்சேர துடுப்பாய் நின்றீர்! மன்பதையின் தலைமுறைகள் அழிந்த போதும் வருகின்ற தலே முறைக்குத் தூது’ நீங்கள்! மென்மையுள்ள மூளேகளேக் கூர்மை செய்யும் மேதினியின் சாணக்கல் நீங்கள்தானே! தின்பதெல்லாம் குடல்புகுந்தால் மறைந்தே போகும்! தினம்படிக்கும் ஏட்டறிவு மறைவதேது? 18