பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமன்னன் குட்டுவனின் வாளின் மோதல் செவிகளிலே விழுகிறதே. உமைத்தி றந்தால்! விரமுள்ள கண்ணகியின் நீள்வா தத்தின் வெடிமுழக்கம் கேட்கிறதே உமைப்பி ரித்தால்! ஈரநெஞ்ச அறச்செல்வி மேக லேப்பெண் எழிற்சிரிப்பும் தெரிகிறதே உம்மைத் தொட்டால்! பாரகத்துக் காட்சியெலாம் ஒளித்து வைத்த 'படுமாயக் கண்ணுடி நீங்கள் தாமோ? நூலாடை மேனியதன் மானங் காக்கும்; நுண்ணறிவின் காவலரோ நீங்கள்; ஏட்டுப் பாலாடை மூலந்தான் வளரும் மூளே ! 'பார்எல்லாம் தெரியும்'என்றே அகந்தை கொள்வோன் , நூலகமே! உமைத்திரும்பிப் பார்த்து விட்டால் நொடிப்போதில் திமிர்வாதம் அடங்கிப் போகும்! காலமெலாம் அழியாத கவிதைக் காட்டைக் கண்போலே வளர்க்கின்ற கழனி நீங்கள்! மதுக்குடமோ நரம்பினில்தான் முறுக்கை ஏற்றும்! மாதுஅவள் உடம்பினில்தான் சுகத்தைச் சேர்ப்பாள்! நதியோட்டம் விழிகளுக்கே மகிழ்ச்சி யூட்டும்! நறுங்கறியோ நாவுக்கே சுவையைக் கூட்டும்! மதியின் உலா காதலர்க்கே இன்பம் சேர்க்கும்! மழலைமொழி இளமையில்தான் எழிலாய்க் காணும்! எதிரில்லாப் பனுவல்களே! நீங்கள் நித்தம் எடுத்துவைக்கும் இன்பத்திற் கீடும் உண்டா? - ാ இ 笠美 3ూ @(G69 - 19