பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் சமுதாயத்தின் உயிர், மயிரிழையில் ஊசாலாடிக் கொண் டிருக்கிறது. அதன் அங்கங்கள் பெருநெருப்பில் வெந்து கொண்டிருக்கின்றன. எங்கள் சமுதாயத்தில் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு பகுதி யில் நின்று ஓலமிடுகிறன். பர்மிய வயல்களின் பசுமையை படரச் செய்தவன் அவன்தான். மலே நாட்டைக் கலே நாடாக்கியவனும் அவனேதான். மறக்கடிக்கப்பட்ட இந்த உண்மைகளே இப்போதெல்லாம் வெறும் வார்த்தையளவில்தான் அவன் சொல்லிக் கொள்ள முடிகிறது. மனிதர் நுழையப் பயந்த காடுகளிலெல்லாம் மனந் துணிந்து துழைந்தவன் அவன்தானென்பதும் இந்த மலையில் ஏற முடியுமா என்று உலகம் திகைத்தகாலே, மலேச் சாலேகளை அமைத்துத் தந்தவன் அவன் தானென்பதும் கடலில் மூழ்கி முத்தெடுப்பவன் அவன் தானென்பதும்நிலம்பிளந்து பொன்னெடுத்தவன் அவன் தானென்பதும் வெறும் மேடை முழக்கங்களாகவே போய்விட்ட நிலையில், அவனது துயரங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. சகோதரர்களின் ரத்த பாசமே தடம் பெயர்ந்து போய்விட்டது. மாந்த&ளச் சிறைச்சாலையில் வழியறியாது மயங்கிக் கிடக்கும் ஆயி ரக்கணக்கான சகோதரர்கள் தங்கள் எதிர் காலத்தைக் கேள்விக் குறியாகவே வைத்துக் கொண்டிருக்கிறர்கள் யாழ் நகரத்தின் தெருக்கள், எங்கள்சகோதரர்களின் ரத்தத்தாலே அலங்கரிக்கப்பட்டிருக்கிறன. 29