பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிஜித்தீவின் தோட்டங்களிலே எங்கள் பரிதாபத்துக்குரிய சகோத ரர்கள், தங்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கடல் கடக்க வழிகாட்டியவனும், கப்பல் செய்து தந்தவனுமான எங்கள் முன்னேன் சாவதற்கே எங்கள் சமுதாயத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிருன். அந்தப் புழு புச்சிகள், அடிபட்டாலும் துடிப்பதற்கூட உரிமை யில்லாது அடங்கிக் கிடக்கின்றன. காலா காலங்களுக்கு கண்ணிர் வடிக்கும் உரிமை மட்டும் எல்லா நாடுகளிலும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. துயரத்தை யாருக்குச் சொல்வதென்று தெரியாமல், தனக்குத் தானே சொல்லிக்கொள்வதற்கு பெயர் தான் கண்ணிள். அவர்கள் பாவம்! வேறு யாரிடம் போய்ச் சொல்வார்கள்? பாவம் தமிழர்கள்! இப்படியோர் இனம் உலகத்தில் ஏன்தான் தோன்றியதோ? சராசரி மனிதர்களுக்குக் கிடைக்கும் சராசரி உரிமைகள் கூட அவர்களுக்கில்லே! அவர்கள் பார்க்கிருர்கள்; மற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை, அவர்கள் மூச்சுவிடுகிருர்கள், உயிர் வாழவேண்டுமேயென்று. அவர்கள் இருதயம் பரந்து கிடப்பதாக எல்லோருமே சொல்கிரும் கள். பாந்து கிடக்கின்ற அந்த இருதயம் முழுவதிலும், துயரம் நிறைந்து கிடப்பதைக் காணமறுக்கிருர்கள். பிறருடைய கருணைக்காகவே அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டிருக்கிரு.ர்கள். .