பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திற்: கற்பனைத் தாயே நின்&னக் கைதொழு தேற்று கின்றேன் சொற்களால் கோட்டை கட்டும் சுந்தர வல்லி நீயே! அற்புத வித்தை செய்தே ஆட்களே ஆட்டி வைக்கும் பொற்கொடி மாதே நின்னைப் போற்றுதல் நேர்மை என்பேன்! குடிசையில் வாழ்வோன் நெஞ்சில் கோபுர எண்ணம் சேர்ப்பாய்! மிடியினுள் ஆழ்வோன் நாவில் மேன்மையை நித்தம் ஈவாய்! இடிமழை ஒசை பாவும் ஏற்றுவாய் மாந்தர் நெஞ்சில் நடிப்பினில் வல்லார் தம்முள் நாடகம் ஆக்கி நிற்பாய்! அடிக்கடி விடுப்புக் கேட்கும் அலுவலன் நாவினுள்ளே படிப்படிக் காரண ங்கள் படர்ந்திடச் செய்வாய்; நோயின் மடியினில் வீழ்ந்த பாட்டி மடிந்தனள் என்பான்; பின்னர் முடிந்திடும் மூன்று திங்கள் மடிந்தவள் மடிவாள் மீண்டும்! ஒதிடும் படிப்புக் கூடம் ஓர்மணி கழித்தே செல்வோன் சேதியை அவனின் ஆசான் சினத்தோடு வினவும் போதில் 25 ് சோதியாய் ஒளிர்வாய்; நெஞ்சில் தோன்றுவாய்; அவளின் நாவோ மாதிறம் படைத்தே மின்னும் மாபெரும் கதைகள் சொல்லும்! கடற்கரை மண்ணிற் காதற் கவிதையே பாடித் துள்ளும் மடக்கொடி யன்னுள் செய்கை மறைந்திட எண்ணும் போதில் அடக்கமாய்ப் பெற்றேர் முன்னே *அருள்மிகுந் தோழி யோடு கடந்தநாள் சேதி பேசிக் களித்தனன்" என்றே சொல்லல், கற்பனைத் தேவி, உன்றன் கண்ணருள் வண்ணம் அன்ருே: குற்றமே செய்வார் நெஞ்சில் குன்றென நிற்கும் செல்வீ! மற்றவர் ஒப்புக் கொள்ளப் பல்வித வேடம் கொள்வாய்! கற்றவர் கல்லார் பேதம் கனவினும் இல்லாய் வாழ்க!