பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டத்தில் மாளிகைத் மன்னன் சாமிரான் அமைச்சர்களோடு அமர்ந்து, ஏதோ முக்கிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். அப்பொழுது பாலேவனப் பறவை யொன்று, எதிரிலிருந்த கற்றாணின் மீது பறந்து வந்து உட்கார்நதது. - தனது Fபறவையின் அவலக் குரலேக் கேட்ட வேந்தன், அதை உற்றுக் கவனித்தான். அதன் கழுத்தை ஒரு பாம்பு கவ்விக் கொண் டிருப்பது நன்ருகத் தெரிந்தது. மன்னன் தன் மகனன பேகாமைத் திரும்பிப் பார்த்தான். நிகரற்ற திறமைசாலியும், சிறந்த வில்லாளியுமான பேகாம், தன் தந்தையின் குறிப்பை அறிந்து கொண்டான். வில்லே எடுத்து அம்பைத் தொடுத்தான். பாம்பின் தலையை அந்த அம்பு துண்டித் தது. பாம்பு தரையில் விழுந்து மடிந்தது. மகிழ்ச்சியான குரலில் கத்திக்கொண்டே, ப ற ைவ சிறகடித்துப் பறந்தோடியது! அரசனும் மற்றவர்களும் அக் காட்சியில் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களாக, அப்படியே அமர்ந்திருந்தார்கள். இயாரட் என்ற பிரதேசத்தை ஆண்ட சாமிரான்-சிறந்த வாள் விரன், வல்லமை மிக்கவன். ஏராளமான செல்வம், அவனது கருவூலத்தில் குவிந்திருந்தது. அவன் அன்று உருவாக்கிய 'இயத்தினுல் சாமிரான்" என்ற நகரம், இன்றும் அழகோடும் சிறப் போடும் விளங்குகிறது. பாம்பின் பிடியிலிருந்து உயிர் தப்பி பறவை பறந்தோடிய சிறிது நேரத்தில், மன்னனும் அமைச்சர் களும் மீண்டும் தங்கள் பேச்சில் ஆழ்ந்தார்கள். மறு ஆண்டு அதே நாளில், அரசன் தற்செயலாக தோட்டத் தில் அதே இடத்தில் உட்கார்ந் திருந்தான். அந்தப் பாலேவனப் பறவை அங்கே பறந்து வந்து, மன்னனின் அருகே எதையோ அலகினுல் வைத்துவிட்டுப் பறந்து சென்றது! அரசனின் கட்டளையின்படி ஒரு போர்வீரன் ஒடிச்சென்று, பறவை வைத்துவிட்டுச் சென்ற தைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான்! அவை இரண்டு மூன்று விதைகள்! பரிசாகப் பறவை தந்த அந்த வி ைத க ளே. அமைச்சர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஆகி யோருக்கு அரசன் காண்பித்து, பின்னர் தோட்டக்காரனிடம் கொடுத்தான். அந்த விதைகளை விதைத்து, பாதுகாப்பாகத் தனி வேலி போட்டு, சரியாக பத் திர 80