பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு பேசினர். அதைப் பற்றி அவர் எழுதியுமிருக்கிருர். 'முக்கியமான மூன்று விஷயங் களைப் பற்றித்தான் மகாத்மா விடம் நாமும், நமது நண்பரான திரு. எஸ். இராமநாதனும் (முன்னுள் விளம்பர அமைச்சர்) சம்பாவழித்தோம். அதாவது, ஒன்று காங்கிரசு’ என்பதை ஒழிக்க வேண்டியது; இரண்டாவது, இந்து மதம் என் பதை ஒழிக்க வேண்டியது; மூன் ருவது, "பிராமண ஆதிக்கத்தை? ஒழிக்க வேண்டியது என்பதா கும். இம் மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப் ராயத்தை மாற்றக் கூடியதாக இல்லே என்றும் சொல்லி, மகாத் மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்!” 1927-இல் இந்தியாவுக்கு வந்த சைமன் கமிஷனே-ஏனைய கட்சி களெல்லாம் வர வே ற் ப த ா , வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தபோது-வரவேற்க வேண்டுமென்று துணிந்து கூறிய வர் பெரியார்தான்! தீண்டாமை, ஜாதி ஒழிப்பு: மதக் குறிகளேவிட்டு விடுதல், ஜாதியைக் குறிக்கும் பட்டப் பெயர்களே நீக்குதல். புரோகி தத்தை அடியோடு நீக்குதல்; பூஜை செய்யத் தரகர்கள் கூடாது. கடவுள் வணக்கத்துக்கு ஒரு காசு கூடச் செலவிடக் கூடாது; பெண் களுக்கு உரிமை தருவது ஆகிய விஷயங்களுக்காக இடைவிடாமல் அவர் பிரசாரம் செய்து வந்தார். இதற்குப் பிறகுதான் ஈ. வெ. ராவை நாஸ்திகர், மதத் துரோகி என்றும், தேசத் துரோகி என்றும் மாற்ருர் வசை பாடினர். அவரும் தான் ஒரு:ஆஸ்திகன்: என்று ஒருபேர்தும் கூறி க் கொள்ளவில்லே! பெரியாரைச் சேரிகட்ட பல மதவாதிகள் முயற்சி செய்தனர். 1930-இல் தன்னை வந்து காணு ш0 IT q}і, சிருங்கேரி மடத்துச் சங்கராச்சாரியார் திேருமுகம்’ விடுத்தார். பல காரணங்களால் பெரியார் சந்திக்கவில்லை. அதே ஆண்டில் காந்தியார் உப்புப் போராட்டம் தொடங்கிய போது ஈ. வெ. ரா. அதனை ஆத ரிக்காமல் கண்டித்ததற்காக காங் கிரசார் அவரை, சுட்டு விடுவதா கவும், வெட்டி விடுவதாகவும் மிரட்டினர். மிரட்டல்களுக்கு அஞ்சும் சுபா வம் ஈ. வெ. ராவுக்கு எந்த நாளி லும் இருந்ததில்லை. ‘இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?' என்று எழுதிய தற்காக, ஈ. வெ. ரா, 6 மாதத் தண்டனை கொடுக்கப்பட்டு சிறை யில் வைக்கப்பட்டார். ஈ. வெ. ரா நீதி மன்றங்களில், எப்பொழுதும் எதிர் வழக்காடுவ தில்லை! காங்கிரசிலிருந்து பெரி யார் வெளியேறிய பிறகு, இவரும், இவரது அரசியல் வைரியான இ ரா ஜ கோபாலாச்சாரியாரும் கோவை சிறையில் ஒன்ருகச் சில காலம் இருந்தார்கள். கட்சி வேற்றுமையால் நெடு நாள் பிரிந்திருந்த இரு நண்பர் களும் இப்பொழுது சி ைற த் தோழர்களாயினர். இருவரும் கலந்து வேலை செய்ய ஒரு பொது வேலைத் திட்டம் போட்டனர். அது காந்தியாருக்கு அனுப்பப் பட்டது-அதில் எண்ணிக்கைக் 39