பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குச் சென்றுவிட்டார். வந்ததும் மனேவி இறந்து போனுர். இறந்த அன்றே திருச்சிக்குச் சென்று அங்கு ஒரு 144-ஐ மீறி கைது செய்யப்பட்டு விட்டார். பெரியார் எந்தெந்தச் செயல் கள் நன்மையாகக் காணப்படு கின்றனவோ, அச் செயல்களே நடத்துவதற்குப் பின் வாங்க மாட் டார்.

  • இவரது மனைவியார் இறந்த வுடன் யாரையும் அழக் கூடாது என்று தடுத்துவிட்டார். அவர் தனது கைத்தடியுடன் வாயிற் படியில் நின்று கொண்டார். துக் கத்திற்கு வரும் பெண்களிடம் அழுவதாயிருந்தால் உள்ளே செல்ல வேண்டாம்; இப்படியே திரும்புங்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பிணம் பெட்டியில் வைக்கப் பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஒட்டப் பட்டது. சுடுகாட் டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முசுலிம் வழக்கம்; வண்டியிற் கொண்டு செல்லுதல் கிறித்துவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக் கொள்கை -இம் மூன்றும் அன் நாகம்மையார் இறந்தபின் பெரி யார் நடத்திக் காட்டிய நன்முறை யாகும். - இந் நிகழ்ச்சி இவருடைய சொல்லுக்கும், செயலுக்கும் ஒரு சான்ருகும். 'முகதாட்சண்யம் இவருக்கு அதிகம்.பண விஷயத்தில் மட்டும் பெரியாருடன் ஜாக்கிரதையாக நடந்து கொண்டால் மற்றக் காரி பங்களில் எவ்விதமான பெரிய குற்றத்தையும் கூட மன்னித்து விடுவார். நீண்ட காலப் பகை வர்களிடமும் கூட வெகு விரை வில் தாமாகவே வலிந்து ஒட்டிக் கொண்டு விடுவார். பெரியார் எந்தப் பொருளையும் ஆதனுடைய பயன் கருதியே போற்றுவார். மொழி விஷயத் திலும் இது பொருந்தும். இதை அவரே கூறுகிருர்:

  • தமிழ்மொழி மிகப் பழைய பழ மொழி என்பதற்காகவோ, அகஸ் தியரால் உண்டாக்கப்பட்ட மொழி என்பதற்காகவ்ோ எனக்கு. அதன் மீது பற்றில்லை. வஸ்து வுக்காக என்று எனக்கு ஒன்றினி டத்திலும் பற்று கிடையாது; அது மூடப்பற்று; மூட பக்தியாகும்.” பெரியாரின் பேச்சாற்றலேப் பற்றி திரு. வி. க. கூறுகிருர்:

"நாயக்கர் ஆயிரக் கணக்கான மக்கள் கூடும் கூட்டத்தில் இ.ை யருது காற்றும், மழையும் கலந்து வீசுவதுபோல், நான்கு ம நேரம், ஐந்து மணி நேரம் பேசு வார்..ஏழை மக்களுக்கு உணர்ச்சி உண்டாகுமாறு அவரைப்போல் பேசுபவர் தமிழ் நாட்டில் அரியர் என்றே கூறலாம்' தனக்குத் தெரியாத செய்தி களில் இவர் தலையிடுவதே இல்லை. இவர் பேச்சில் அடிக்கடி பழ மொழிகளும் உபமானங்களும் கலந்துவரும். - தோட்டத்தில் பகுதிகிணறு," தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதுபோல்', 'வெள வால் வீட்டிற்கு உறவு முறையார் வந்தால் ஆளுக்கொரு கிளையில் தானே தொங்க வேண்டும்,” 'காய்த்த மாத்துக்குத்தானே கல்லடி விழும்”, பட்டுச் சீலேயை இரவல் கொடுத்து மனயைத் தூக்கிக் கொண்டே திரிவதா?” பூசனிக்காய் அளவு முத்தை எதில் தொங்க வைப்பது' முதலி யவைகள் அவர் உபயோகிக்கும் பழமொழிகளிற் சில. விவாதத்தில் யாரும் இவரை வெல்ல முடியாது. அடுக்கடுக்காகக் கேள்வி களேப் போடுவார். சொற்களின் பொருளே விளக்க வேண்டுவார். எவராவது அவரிடம் சொல் வழங், கிடும் போது அவர் கேள்விகள் திகைப்பை அளிக்கும். பழக்கத் 42