பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மணி எட்டாயிடுத்தேடா... இனிமெ நான் எப்ப போயி திரும்ப வரது?...ஏய் அம்பி, அம்மாவை வேலையைச் சுருக்கா முடிக்கச் சொல்லுடா...அப்பப்பா காலங் கார்த்தாலே வெயில் உக் கிரமான்கு எரிக்கிறது...' பஞ்சாமிக் குருக்கள் (பஞ்சாப கேஸ்வரக் குருக்கள் என்பதன் குறு க்கல் விகாரம்) குளித்து முழுகி மடி ஆசாரத்தோடு தயாராக நின்று கொண்டிருந் தார். ஈரம் புலராத முடி ஒரு பனங்காயளவு முடியப்பட்டுத் தோளில் புரண்டது. தண லேக் குளிப்பாட்டி வைத்தாற் போன்ற அவரது கரிய திருமேனியில் ஆங்காங்கே திருவெண் ணிறு துலாம்பரமாகப் பளிச்சிட்டது. சீஷப்பைய ன் அடுக்களே யிலே யி ரு ந் து நைவேத்யத்துக்கு வேண்டிய பொங்கல் பிரசாத்தை சிறு டிபன் பாக்ஸில் வைத்து, சாயத் துணியால் மூடி, கொண்டு வந்து எதிரே வைத்தான். பின் ஆளோடி க்குப் போய் சுவரோர மாகச் சாத்தி வைக்கப்பட்டிருந்த சைக் கிளைத் தள்ளிக் கொண்டு வந்து முற்றத்தில் ஸ்டாண்டு போட்டு நிறுத்தனன். பஞ்சாமிக் குருக்களைப் போலவே அதுவும் பழைய தலைமுறையைச் சேர்ந்த சைக்கிள். - பஞ் சாமிக் குருக்கள் பெரிய குடும்பி. ஐந்தாறு பிள்ளைகள். ختير புரோகிதம்தான் தொழில், அந் நான்கைந்து மைல் சுற்று வட்டா ரத்தில் எல்லாக் கோவிலுக்கும். அவர்தான் மணியடிக்கிருர். ஒவ்வொரு கோவிலுக்கும் சம்பள மாக ஒரு கலம் நெல்லும், பதினேந்து ரூபாயும் வருகிறது. இதை வைத்துக் கொண்டுதான் "ஆட்டைத் தூக்கிக் குட்டியிலே போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டிலே போட்டு என்பது போல என்னென்னவோ செய்து, பகீரதன் மேலே இருந்த கங்கை யைக் கீழே கொண்டுவந்தது. மாதிரி, இவர் அதல பாதாலத் திலே கிடந்த தன் குடும்பத்தை மேலே தூக்கி விட்டார். மூத்த பையன் பிலாய் உருக்குக் கம்பெனியில் வேலை பார்க்கிறன். அடுத்த பையன் மாதுங்காவில் இருக்கிறன். தோல் ஏற்றுமதி இறக்குமதி க ம் ெப னி யி ல். மேனேஜர் வேலை, மூன்ருவது மகன் திருவையாற்று வேதப் பாடசாலேயில் புரோகிதம் படிக் கிருன். எல்லாப் பிள்ளேகளுக் குமே அவரவர்களுக்கு ஏதோ வழி செய்து-கைகாட்டி விட்ட பிறகும் கூட அவர் கோவிலுக்கு, மணியடிப்பதை விடவில்லை. பஞ்சாமிக்குருக்கள் சைக்கிளேத் தள்ளிக்கொண்டு புறப்பட்டார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் 8ᎶᏆᎼ மொட்டைப் பண்டாரம் பட்டினத்தார் பாட்டொன்றைத் 70