பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பும் தவறுமாகப் பாடிக் கொண்டு அப்போதுதான் எதிரே வந்தான். அவனைக் கண்டதும், 'பர்வதம்...அடியே பர்வதம்’ என்று குரல் கொடுத்தார். 'உன்னேத்தாண்டி... இந்தச் சாமியாருக்கு ஏதாச்சும் போட்டுப் போகச்சொல்லு" என்று சொல்லி விட்டுச் சைக்கிளில் ஏறி உட்கார்ந் தார். அதற்குள் அடுத்த தெரு அம்மாக் கண்ணுக் கிழவி தன் பேர&ன அழைத்துக்கொண்டு எதிரே வந்தாள். 'சாமி.பையனுக்கு மொறைக் காய்ச்சல் ஏதோ காத்துக் கறுப்பு தோஷம் போலிருக்கு; வெரண்டு வெரண்டு அழருன்... உடம்பு நெருப்பாக் காந்துது...” என்று சொல்லிவிட்டு முந்தானே யால் கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்ருள். பஞ்சாமிக் குருக்கள் கீழே இறங்கிப் பையனேத் தொட்டுப் பார்த்தார். மடியில் இருந்த விபூதிப் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் விபூதியை எடுத்துக் கண்ணே மூடிச் சற்றே தியானித்த வாறு, அவனுடைய நெற்றியில் இட்டுக் கையிலும் கொஞ்சம் கொடுத்தார். "வீட்டுக்குப்போயி இன்னெரு தடவை நெத்தியிலே இட்டுக்கோ!. ஈச்வரன் க்ருபை யாலே எதுவா இருந்தாலும் சொஸ்தமாயிடும்' என் ருர் பின் அம்மாக் கண்ணுக் கிழவியிடம் ஏதோ சிறு கைவைத்தியமாக சிலவற்றை விளக்கினர். தெருவில் அன்னக் காவடிப் பண்டாரத்துக்குப் பிச்சை போட்டுவிட்டுத் திரும்பிய அய்ய ரின் ஸகதர்மணி அந் தக் காட்சியைப் பார்த் ததும் தோள்பட்டை யால் முகத்தைஇடித் துக்கொண்டு,"ஆசார மாம்... அதுவீ டான வீட்டில் மாம் ... பூஜைக்குப் போற நேரத்திலே எவனே ஒரு பறப் பிள்ளையைத் தொட்டுத் தீண்டிட் டுப் போருாே...ஏன்தான் இந்தப் பிராமணனுக்கு இப்படிப் புத்திக் கெட்டுப் போறதோ?’ என்று உள்ளுறச் சலித்துக்கொண்டாள். பஞ்சாமிக் குருக்கள் தம் வாக னத்தில் ஆரோகணித்தபடி தம் திக்விஜயத்தைத் தொடங்கினர். ஐயர் கோயிலுக்கு மணியடிக்கும் குருக்கள் மட்டுமல்லர். அந்த வட்டாரத்தில் உள்ள எல்லாரோ டும் ஒன்றிப் போய்விட்ட ஒரு வினுே:தமான பிரகிருதி. யார் கலியாணம் கருமாதி என்ருலும் இவர்தான் முன் னின்று நடத்துவார். ஊர்ப் பொதுக் காரியங்களிலெல்லாம் கலெக்டருக்கு மனுக் கொடுப்ப தில் இருந்து, ஊர்ப் பொதுக் குளத்தை யாருக்குப் பாசிக் குத்தகை விடுவது என்பது வரை - அவர் தலையிட்டு முடித்து வைப்பார். அவரைப் பற்றி இரண்டு விதமான அபிப்பிராயங் கள் எப்போதுமே இருந்து வந் தன. சில பேர், பஞ்சாமிக் குருக்களா? பிராமனுேத்தம ராச்சே அவர்... அவர் இருக்கற திேைலதான் இந்தப் பாழப் போன ஊர்லே கூட தவறயில் மழை பெய்யுது” என்பார்கள். இன்னும் சிலரோ அவரா...? அவர் என்ன பிராமணன் மாதி ரியா நடந்துக்கருர்? 'தீட்டு’ 'தொடக்கு எதுவுமே இல்லே; தாலுக்கா ஆபீஸ் டவாலிச் சேவ கன் மாதிரி பூணு சில மாட்டி கிட்டா எல்லாம் ஆயிடுச் சா .. என்னவோ கர்மாந்திரம்’ என் பார்கள். பஞ்சாமிக் குருக்கள் ( ) C