பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துவிடுமா? என் மரணத் துக்கு பின் மாற்ருர் வசம் சிக்கிச் சீரழிந்துவிடுமா? அந்தோ! இதற் காகவா இத்தனே அரும்பாடுகள் பட்டு இதைக் கட்டிக் காத்து வந்தேன்??’ என்கின்ற பேரிடி போன்ற கவலைகள் எப்போதும் அவர் உள்ளத்தைத் தைத்துக் கொண்டே இருந்தன! இக் கவலைகளே பெரிதாக உரு வெடுத்து அவர் மரணத்திற்கும் காரணமாகி, அம்மா வீரரை இப் புவியினின்று மறைத்து விட்டது இயற்கை! சிவாஜிக்குப் பிறகு அவருடைய மூத்த மைந்தனை சாம்பாஜி அரசுக் கட்டிலிலே ஏறிஞன்! அன்பும், பண்பும் எக்கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந் தோ-வீரமும் விவேகமும் எச் செங்கோலில் குடிகொண்டிருந் ததோ-அங்கே ேக ைழ த் தனமும் கொடுரச் செயலும் தலே தூக்கி நிற்க ஆரம்பித்துவிட்டன. சாம்பாஜி மன்னனுகி பொறுப் பற்ற தன்மையில் ந ட ந் து கொண்டதால் மக்கள் பெரிதும் பீதியடைந்தனர். அன்னியரின் தாக்குதல்கள் அடிக்கடி நம்மை இப்படி பயமுறுத்திக் கொண்டி ருக்கும் போதே மன்னன் மதுப் பிரியனுகவும், பெண் பித்தன கவும் இ ரு ந் து .ெ கா ன் டு காலத்தை வீணுக்கிக் கொண்டி ருக்கின்றனே! அந்தப் புலிக்கு இந்தப் பூனே எப்படித்தான் பிறந்ததோ எ ன் ெற ல் லா ம் எண்ணி சொல்லொளுத வேதனை கொண்டனர். ஒரு நாள் எங்கெல்லாமோ தன் மனம் போன ேப ா க் கெல்லாம் சுற்றி அகலந்து திரிந்து விட்டு ஆற்றங்கரையோரமாக குதிரையில் வந்து கொண்டிருந் தான் சாம்பாஜி! தீடீரென்று அவன் கண்களுக் கெதிரே மின்னலிட்டது போல ஒரு காட்சி! அது கண்களைப் போக்கும் மின்னலல்ல; சிந்தை சொக்கும் சித்திரப் ப ா ைவ போன்ற தொரு மின்னலிடைக் காரி! பூக்குடலே ஏந்தி அவள் ஒய்யார நடைபோட்டுச் செல்லும் காட்சியைக் கண்டு ஒரு நிமிடம் குதிரையை நிறுத்தி, அவளது சிங்காரத்தில் தன் சிந்தையைச் செலுத்தின்ை, அவளுடைய அழகு அவன் உள்ளத்திலே காம வெறியைத் தூண்டியது. இத்தனை அழகு படைத்த இவள் யாராய் இருக்கக் கூடும்? என்றும் சிந்தித்தவாறே அவளின் பின்னே சென்று கொண்டிருந் தான். மன்னன் பின் தொடர் வதை அறிந்த அந்த வேல்விழி யாள், விறுவிறு என்று நடையை வேகமாகப் போட்டுச் சென்று தன் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்? அவள் சென்ற இல் ல த் ைத கண்டவுடன் தன் குதிரையைச் சட்டென்று நிறுத்தி விட்டான் சாம்பாஜி! காரணம் அவனுடைய தளபதி கண்டோஜி யின் இல்லம், 'கண்டோஜிக்கு ஒரு தங்கை இருக்கிருளென்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன்! ஆல்ை, இப்படி அ ழ கி ன் பிறப்பிடமாய் ஆழ் கடலின் ஒளி முத்தாய் அவள் இருப்பாளென்று நான் கனவிலும் கருதியது கிடையாதே! தளபதி இத்தியச்சித்தர் 87