பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-யில் புதியதோர் ஒளி தரும் கருத் தாகும். இங்கு ஆசிரியர் கூற்று முறை அமைந்த அகப்பொருள்நூல்கள் பாட்டுக்கள் இன்று எங்கே? எனக் கேட்கும்போது. அவை இருந்து அழிந்து பட்டன என்றே_கூற வேண்டிய நிலையிலிருக்கிருேம். ஆல்ை, அவை இருந்தன என்ப தற்குரிய அரிய சான்று கோவை நூல்களில் அமைந்த கவிக்கூற்று ஆகும். அதுமட்டுமின்றிப் பழந் தமிழ்க் கூத்தில் இறுதிப்படியாக விளங்கிய தெருக்கூத்துக்களிலும், குறவஞ்சி நாடகங்களிலும் வரும் கட்டியக்காரன் கூற்ருனது கவிக் கூற்றேயாகும். கவிஞனே கதை யை இயக்குபவன். அக்கவிஞன் குரலாகக் கட்டியக்காரன் கூத்தில் இடம் பெற்ருன். தமிழர் எழுதிய எல்லா நூல்க ளும் அழியாமல் இன்று கிட்டியி ருந்தால் வரலாற்ருராய்ச்சியிலும், க்கல் ஆராய்ச்சிலும், இலக்கிய ஆராய்ச்சியிலும் பல உண்மை களைத் தெளிவாக உணர்ந்திருக் கலாம். அதோடு உலகத்துக்கும் பல உண்மைகளை உணர்த்தி வழி காட்டிஇருக்கலாம். என்செய்வது! சங்ககால இலக்கியங்கள் எல் லாமே கூட நம்க்குக் கிட்டவில்லை யே! சங்ககாலத்திய படைப்புக் களில் விரல்விட்டு எண்ணத்தக்க -வை மட்டுமே நடிக்குக்கிட்டின. அவ்வாறிருக்கையில் தம்முடைய ஆராய்ச்சிகளில்மறுப்புக்குரியவை களைக் கூறுவோர் துணிந்து எதை .யும் கூற முடியாதே! பண்டை க்கால நாடக உரை யாடல் எவ்வாறிருக்கும் என்ப தற்கு எதிர்பாராத வகையில் ஒரு சான்று புறநானூற்றில் கிட்டுகி றது. அதிகமான் நெடுமான் அஞ்சி போர்க்களத்தில் மார்பில் வேல் ஊடுருவிப் பாய இறந்துபட்டான். அதைக்கண்ட செந்தமிழ்ப்புல மைச் செல்வி அவ்வையார் உள் களம் புண்பட்டு நொந்தழுது அரற் 94 றிய ாெமழிகள் எவ்வாருே பாட் டாக நம்புறநானூற்றில் அமைந்து விட்டது. இது தமிழரின் நற்றவமே போலும்! அப்பாட்டினை இணைக் குறள் ஆசிரியப்பா என யாப்பியல் வழி வழங்குவர். ஆயின், பாட்ட மைதியினுTடே அக்காலப் பேச்சு வழக்கியல்பே மிகுந்திருப்பதை நுண்ணிய ஆய்வு நோக்கோடு கற்போர் அறிய முடியும்' சிறியகள் பெறினே எமக்கு ஈயும் மன்னே! பெரியகள் பெறினே யாம் பாடத்தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே! சிறு சோற்ருலும் நணிபல கலத்தல் மன்னே! பெருஞ் சோற்ருலும் நனிப்ல் கலத்தல் மன்னே! என்பொடு தடிபடு வழி யெல்லாம் எமக்கு ஈயுமன்னே! அம்பொடு வேல்துழை வழியெல்லாந் தான் நிற்கும் மன்னே! நரந்த நாறும் தன் கையால் புலவு நாறும் என்தலே தைவரு மன்னே! அருந்தலை இரும்பானர் அக்ல் மண்டைத் துளையுறீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று அவன் அருநிறத்து இயங்கிய வேலே ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ! இனிப்பாடுநரும் இல்லைப் பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லைப் பனித்துறைப் பகன்றை நறைக் கொண் மா மலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப் பலவே' (புறநானூறு. 235)