பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லித் தடுப்பதுண்டோ ? சூழ்ச்சியெலாம். நானறிந்தேன் செல்லத் துரையேநீர் சென்றிடலாம் என்றுரைத்தாள் ! வெட்டும் விழியூறி வீழுங்கண் ணிரருவி பட்டிதழின் கன்னத்தில் பாய்ந்துவரக் கண்டானே காதல் துடிப்புணர்த்தும் கட்டழகி நெஞ்சிரண்டும் மோதும் அலேபோலே முன்னேக்கிப் பின்வீழ்ந்தே ஆடிக் கவலையுறும் அந்தநிலை கண்டானே சூடி யிருந்த மலர்சிரிக்கத் தோகையவள் வாடும் மலர்முகத்தைக் கண்டானே நெஞ்சத்தில் ஓடிவரும் காதல் உணர்ச்சியில்ை மாதவளேத் தொட்டு முகந்திருப்பித் தோளில் அனைத்தபடி கட்டழகே என்னன்பே கண்ணிர் நிறுத்திவிடு பேசும் படங்காணப் பெண்ணே நீ இப்பொழுதே வா, சிரிப்பாய் ! என்றுரைத்து வண்ண மலர்முகத்தின் நீரைத் துடைத்துவிட்டான் ! நெஞ்சங் களித்தவளும் தோளேப் பிடித்துத் தொடர்ந்து நடந்தாளே ! படங்கண்டாள்; காதல் மடங்கொண்டாள். புத்தம் புதுவயிரம் போல்மின்னும் புன்னகையின் முத்துப்பல் காட்டி முழுதுஞ் சிரிக்காமல் அண்ணல்கை கோர்த்தே அழகு மயில்போலே பெண்மானேர் காளையுடன் பேசி நடப்பதுபோல் சிங்கம் நடந்துவரச் சிற்றன்னம் தொடர்ந்துவரும் , இங்கிதம்போல் தானும் இணைந்து நடந்தாள் ! படத்தில் வருங்காதல் பார்க்கும் பொழுதில் மடப்பெண் அவள்செய்த மட்டற்ற செய்கையெலாம் ஈண்டுரைத்தால் காதல் இலக்கியத்திற் காகாதாம், தீண்டும் இரண்டுயிர்கள் தேர்ந்தநல் லின்பத்தைப் பாாறியக் கூறுவது பச்சை மொழியாகும் ஊரறியக் கூறல் உயர்ந்த செயலல்ல சற்றுக் குறிப்பிட்டால் சார்ந்தபொருள் கற்பனையால் பெற்றுக் களித்தல் பெரியோர் கடகுைம் ! பேசும் படமுடியப் பெண்ணமுத வல்லியுடன் பேசி நடந்துவந்தான்; பீடு நடையுடையான். பாட்டுச் சிறப்பும் படத்தில் நடித்தபெண்கள் கூட்டும் உணர்ச்சியையும் கோதை மதிப்பிட்டாள் ! சண்டையிட்ட நாயகனின் சாதுரியத் தைமெச்சிப் பண்டைமன்னர் போல்நடித்த பாங்கும் அவள்புகழ்ந்தாள் : 99