பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ற்பில் வழுவாத கன்னியருஞ் சிற்சிலரே மற்றந்த வாழ்வும் மனமகிழ்ச்சி சேர்ப்பதில்லே. காதல் உளத்துக் கணக்னத்தாம் கைப்பிடித்த மாதர்க்குக் கற்பே மதிப்புடைய சொத்தாகும் ஆதலினல் வாழ்வில் அவர்போல் களிப்பவர்கள் மேதினியில் வேறில்லை; மேன்மை பிறிதில்லை. உள்ளத்தில் பட்ட துரைத்தேன் பெரியவரே தெள்ளத் தெளிந்தும் கருத்தைத் தெரிவித்தால் காதலித்த நெஞ்சினரின் கண்ணில் மகிழ்ச்சியெனும் சோதி பெருகிவரும் சுந்தரமாம் காட்சியினே எண்ணங்கள் ஒன்றின; இதயங்கள் வாழ்த்தின! இப்பொழுதே கண்டுவிட எண்ணுகிறேன் சொல்லுமென்ருர். தப்பேது மில்லேயே தங்கள் கருத்திலே ஒப்புகின்றேன் ஒப்புகின்றேன் உண்மை நலஞ்சேர்க்கும் இப்பொன் மொழிக்கோர் எதிர்ப்புண்டோ என்று மலேயப்பர் கூறி மனந்திறந்து விட்டார்; தலைக்கொன்ருய் மாலே தருகவெனக் காவலர்க்கோர் ஆணேபிறப் பித்தார் அதிகாரி மங்கை நாணித் தலைகுனிய நம்பி மணியனவன் வாழைமர மின்றி வளர்க்கும் நெருப்பின்றி மேள முழக்கின்றி வேத மொழியின்றி நெஞ்சில் நிறைந்திருக்கும் நீங்காத காதலொன்றே எஞ்சி யிருக்க எழுந்தம் மலர்க்கொடி க்கே பூமாலே சூட்டிநின்றன்; புன்முறுவல் காட்டிநின்றன் தேன்மாலே யன்னேன் திருமார்பில் சூட்டிவிட்டுப் பின்னும் தலைகுனிந்தாள் பெண்ணுள் அமுதவல்லி. மின்னுமவள் கண்ணில் மிதந்துவரும் இன்பவொளி; அன்பு மணியன் அரும்புமொரு புன்னகையால் தன்பால் எழுந்த தனியின்பம் காட்டுனிலே; கண்டு களித்திருந்தார் காவல் அதிகாரி. வண்டு விழிமானும் வாடாத தாமரைச்செங் கண்னேனும் அன்னரைக் கண்டு வணங்கிவரப் பெண்ணுேடும் மாப்பிள்ளே யோடும் மலேயப்பர் நன்றி யுரைத்து நடந்தார்; - அதிகாரி நின்றிருந்தார்; வாழ்த்துரைக்கும் நெஞ்சு! 103