பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

حصوه ,து) عصحم عليه (ఫ్రో கற்கண்டு கரைந்து பயன்தருகி றது; கருங்கல்லோ கரையாமல் இருந்தே பயன் தருகிறது. வழிக்கு ஒரு நோக்கமுண்டு; நோக்கத்துக்கோ பல வழிகள் உள்ளன. ஒருநாள் உணவு மறுநாளுக் குப் பயன்படாமல் போய் விடு கின்றது. மொழிப்பற்றும் இதைப் போன்றதே. ஒரு தலே முறையின் மொழிப்பற்றுப் பலதலைமுறைக்குப் பயன்படுவதில்லை. உணவைப் போல் மொழிப்பற்றையும் புதிது .புதிதாகச் சமைத்துக்கொள்ள வேண்டும். - நெய்விளக்கின் ஒளியும் விளக் கெண்ணெய் விளக்கின் ஒளியும் ஒன்றே! நெய் விளக்கில் வீண் பெருமையும் அறிவின் சிறுமை பும் உள்ளன: உரிய சாவிதான் பூட்டைத் திறக்கும் என்பதில்லை; வேறு சாவியும் பூட்டைத் திறக்கிறது. எல்லாம் தாங்கும் உலகத்தை எதுவும் தாங்குவதில்லை. வெண்ணெய் உருகினல் நெய் யாகும்; நெய் உருகில்ை வெண் ணெய் ஆகுமா? நெய் உருகில்ை நெய்தான்! ஆறு சென்றவழி அழியாவழி. சோறு துணையில்லாமல் உள்ளே செல்லாது. வானத்திலிருந்து தண்ணிர் வந்தாலும் மண்ணிலிருந்துதான் ஆதை நாம் எடுத்துக் கொள்ளு கிருேம். கோழி தோகை விரித்தாடுவி தில்லை; ஆனல் வீடுகளில் எங் கும் தோகை விரித்தாடும் மயிலே யல்ல - தோகை விரித்தாடாத கோழியையே வளர்க்கின்றனர். உலகம் வானவெளியில் பறக் கும் மண்பறவை! இருளில் எரியும் விளக்கில், இருள் அழிவதுபோல் காணப்பட் டாலும் உண்மையில் விளக்கில் ஒளிதான் அழிந்துகொண்டிருக் கிறது. நிழல் வாழ்வதற்கும் ஒளியே வேண்டும்! அம்பின் உருவம் மாறிவிட்டது; ஆல்ை அம்பின் உள்ளம் உலகில் அப்படியே இருக்கிறது. 'பசு சாதுவான மிருகம்’ என்று பாராட்டும் போது அந்தப் பாராட்டின் அடிப்படையில் நம் 14