பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ஓர் பூக்காடு; புனல்சூழ்ந்து வடிந்து போன நிலத்திலே புதிய நாளே” மனிதப்பைங் கூழ்மு ளேத்தே வகுத்தது மனித வாழ்வை, இனியநற் றமிழே நீதான் எழுப்பினே! தமிழன் கண்ட கனவுதான், இந்நாள் வையக் கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றே: (1) இசை, கூத்தின் முளை பழந்தமிழ் மக்கள் அந்நாள் பறவைகள் விலங்கு, வண்டு, தழைமூங்கில் இசைத்ததைத், தாம் தழுவியே இசைத்த தாலே எழும்இசைத் தமிழே! இன்பம் எய்தியே குதித்த தாலே - விழியுண்ணப் பிறந்த கூத்துத் தமிழே என்வியப்பின் வைப்பேl (2) இயற்றமிழ் எழில் அம்மானன் றழைத்தல் காகா, எனச்சொல்லல், அஃகென் ருென்றைச் செம்மையிற் சுட்டல் என்னும் இயற்கையின் செறிவி ேைல இம்மாநிலத்தை ஆண்ட இயற்றமிழேஎன் அன்பே - சும்மாதான் சொன்னர் உன்னை ஒருவுன்பால் துளிர்த்தாய் என்றே (8) தமிழர்க்குத் தமிழ் உயிர் வளர்பிறை போல்வ ளர்ந்த தமிழரில் அறிஞர் தங்கள், உளத்தையும் உலகில் ஆர்ந்த வளத்தையும் எழுத்துச் சொல்லால், விளக்கிடும் இயல்மு திர்ந்தும், வீறுகொள் இசைய டைந்தும், - அளப்பிலா உவகை ஆடற் றமிழேநீ என்றன் ஆவி! (4) சாகாத் தமிழ் படுப்பினும் படாது, தீயர் பன்ளுைம் முன்னேற் றத்தைத் தடுப்பினும், தமிழர் தங்கள் தலைமுறை தலைமு றைவந் தடுக்கின்ற தமிழே! பின்னர் அகத்தியர் காப்பி யர்கள் - கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளே தொத்தும் கிளியே வாழி! (5) பாவேந்தர் 24