பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடு . ன்ெமார்க்குடையும் பஸ்ஸை விட்டு இறங்கிய ஏகாம்பரம் தன் குடையை விரித் துப் பிடித்துக் கொண்டான். மழை அழுது கொண்டிருந்தது. உடம்பையே சல்லடைக் கண்ணு கத் துளைத்துவிடத் தயாராகி விட்டது மாதிரி ஒரு சில துளிகள் காற்றின் வீச்சால் வேகத்தோடு மேலே விழுந்தன. பஸ்ஸை விட்டு இறங்கிய சிப்பந்திகள் ஓட்டமும் நடையுமாக ஐம்பதடி துாரத்திலிருந்த ஆபீஸ் வரந்தா வை நோக்கி விரைந்தனர். நல்ல வேளே, ஏகாம்பரம் அன்று குடை யோடு வந்திருந்தான். முன்னும் பின்னும் குடையில் லாதவர்கள் விரைந்து போவதைப் பார்த்ததும், யாருக்காவது உதவி செய்யலாமே என்ற நினைப்பில், ஏகாம்பரம் திரும்பிப் பார்த்தான். லே யி ல் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு, கையிலிருந்த தோற்பையைமார்போடுஅணேத்த படியே பின்னே வந்துகொண்டி ருந்தார் அவர். யோரது?...ஓ! நம்ம ஏ. எஸ்... குடை கொண்டுவல்லே போலி ருக்கு...' ஏகாம்பரம் திரும்பிப் பார்த்து விட்டு, பவ்யமாக தயங்கி நின்று, 'குடைக்குள்ளே வந்துடுங்கோ சார்...” என்ருன். அவரும், அந்த அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவரே போல ஓடிவந்து குடைக்குள் ஒடுங்கிக் கொண் டார்.ஏகாம்பரத்திற்குப் பெருமை பிடிபடவில்லே. த ன் னு ைட ய மேலதிகாரி தன் குடையின் கீழ் வருகிருர் என்ற பெருமையாலும்அதே நேரத்தில் மதிப்பு கலந்த அச்சத்தாலும்-அவன் தடுமாறிப் போனன். மழைச்சாரல் அவர் மீது துளியும் பட்டுவிடாமல் அவர் பக்கமாகவே குடையை வாகாகச் சாய்த்துப் பிடித்துக்கொண்டான். அவர் அவனேவிட உயரமாக இருந்ததால் தூக்கியே பிடிக்க வேண்டியிருந்தது. சிங்கராச்சாரி தெருவில் பூரீபார்த்தசாரதி ஸ்வாமி திருவீதி வலம்வரும்போது பட்டுக் குடைகளேத் துளக்கிப் பிடித்துக் கொண்டே செல்லும் காட்சியை அவன் நினைத்துக் கொண்டான். வலது தோளுக்குமேல், குடைக் கம்பியிலிருந்து நழுவி, அதிர்ந்து விழுந்த நீர்த்துளிகள் அவனு டைய அழுக்குப்படிந்தசட்டையை நனைத்தன. ஆபீஸ் வரந்தாவை அடைந் ததும் ஏகாம்பரத்தை நோக்கி, ஆளேயே சுருட்டி விழுங்கிவிடு வது போன்ற புன்னகையுடன் அவர் சொன்னர்: ரொம்ப தேங்க்ஸ்...நான் கொஞ்சம் கேன் டீன் வரை போகணும்... நீங்கள் ஏகாம்பரம் அவர் சொல்ல வ ந் த ைத ப் புரிந்துகொண்டு 'குடைதானே ... பரவாயில்லே... நீங்க எடுத்துட்டு போயிட்டு வாங்க' என்று அவர் கையில் குடையைத் தி னி த் து விட் டு வராந்தாவிற்குள் தாவின்ை... 39