பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்கள்யார்? மனிதர்கள் இதுஎன்ன? என்னை எங்கே எடுத்துச் செல் லுகிருர்கள்? எதற்காக இப்படி என்னை புரட்டி உருட்டு கிருர்கள்? நான் எங்கே போகிறேன்? கண்ணிருந்தும் என்னே ஏறெ டுத்துக் கூடப் பார்க்காத இந்த மனிதர்களிட்ம் எனக்கென்ன வேலை? நான் கல்; வெறும் கல்; அவர்களின் காலடிகளிலே மிதி பட்டு, உதைபட்டு மதிப்பிழந்து கிடக்கும் வெறும் சடப்பொருள். இப்போது ஏன் உறவு கொண் டாடுகிருர்கள்? - 'கல்-கல்-கல் இந்த மெல்லிய ஒலிகளின் ஒ ைச யோ டு நாட்கணக்காய், மாதக்கணக்காய் எத்தனேசிற்றுளி களே என் மீது பாய்ச்சி ஓடவிட் டார்கள் தெரியுமா? சித்திரவதை செய்து செதுக்கிச்செதுக்கிப் புண் படுத்திவிட்டார்கள் தெரியுமா? கடைசியாக ஒரு மனிதன் வந் தான். - அவன் இதயத்தில் மலர்ந்த கனவுகளுக்கு ஏற்றமாதிரி ஏதோ ஒரு வடிவம் கொடுத்தான். நீண்ட நெடுங்காலமாக அவன் நெஞ்சில் ஊறிய ஒரு கவிதையை, கற்ப னேயை, என் மீது உருக்கி ஊற்றிஎன்னே ஒழுங்குபடுத்திவிட்டான். அவனுடைய இலட்சியத்தைநிறை வேற்றிக் கொண்டு-இதயதாகத். தைத் தணித்துக் கொண்டு போய் விட்டான். இப்போது நான் கல் அல்ல; சிலே! சிற்ப இலக்கியத்தின் சிகரத். தில் நின்று கொண்டிருக்கிறேன். ஆல்ை- - இந்த இருட்டு, மண்டபுத்தில் ஏன் என்னேச் சிறைவைத்திருக்கிருர்கள்? என் மீது ஏன் மலர்களேச் சொரிகிருர்கள்? அன்று என்னை மதிக்காத மனிதர்கள்-இன்று. என் காலடியில் விழுந்து வணங்கி கோடிக் கணக்கான வரங்களைக் கொடுக்கச் சொல்லி மண்டியிட் டுக் கேட்கிருர்களே ஏன்? கல்லா கக்கிடந்த நான் சிலேயாக மாறிய தாலா! 'இறைவனே! என்னை மீண்டும். கல்லாக்கி விடு; நான் தனிமை: யில் இருக்கவேண்டும். இந்த, மனிதர்கள் எங்கோ போய் கொண் டிருக்கிருாகள்! இதுவே என் கல் மனத்தில்’ ஒலிக்கும் கடைசிக். குரல் ஆம்! நான் கல்லாக வேண்டும்!” முயற்சி கூலி தரும் வாழ்க்கையில் நாம் சிறந்த பொருள்களே வாழ்க்கைக்கு வளமான பொருள்களேச் சிறிதும் வாட்டமின்றிப் பெற முடியாது. அதற்கு. ஓயாத உழைப்பும் சலியாத முயற்சியும் வேண்டும் ! -பேரறிஞர் அண்ணு 45