பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்தமிழா உன்னைக்காண இளந்தமிழா! உன்னேக்கான இன்பம் மிகப் பெருகுது இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் சற்றுக் குறையுது வளந்திகழும் வடிவிைேடும் வலிமைபேசி வந்தனே வறுமைமிக்க அடிமைநிற்கு வந்த ஊக்கம் கண்டுநான் தளர்ந்திருந்த சோகம்விட்டுத் தைரியங்கொண் டேனடா தமிழர்நாட்டின் மேன்மைமீளத் தக்ககாலம் வந்ததோ! குளிர்ந்த எந்தன் உள்ளம்போலக் குறைவிலாது நின்று நீ குற்றமற்ற சேவை செய்து கொற்றமோங்கி வாழ்குவாய். அன்பிைேடு அறிவு சேர்ந்த ஆண்மை வேண்டும் நாட்டிலே அச்சமற்ற துாயவாழ்வின் ஆற்றல்வேண்டும் வீட்டிலே இன்பமான வார்த்தைபேசி ஏழைமக்கள் யாவரும் எம்முடன் பிறந்தபேர்கள் என்ற எண்ணம்வேண்டுமே துன்பமான கோடிகோடி சூழ்ந்துவிட்ட போதிலும் சோறுதின்ன மானம் விற்கும் துச்சவாழ்வு தொட்டிடோம் என்பதான நீதியாவும் இந்த நாட்டில் எங்கனும் இளந்தமிழா! என்றும்நின்று ஏடெடுத்துப் பாடுவாய். நாமக்கல் கவிஞர்