பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னச் சுற்றிலும் இருந்த காடு முழுவதும் எரிந்து சாம்பலாய்ப் போயிருந்த காட்சிய்ைக் கண் டான். அதே சமயம் தான் தீயில் வெந்து சாகாமல் இருப்பதைக் கண்டு வியந்தர்ன். தன்னைச் சுற்றிலும் இருந்த இடம் முழுவதும் ஈரம் மாருமல் இருப்பதை யும், புற்கள் பசுமையாகத் தளதளவென்று தலை நிமிர்ந்து நிற்பதையும் கண்டு ப்ெரு வியப்படைக் தான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனுக் குத் தன் நாயின் நினைப்புவந்தது. சுற்று முற்றும் அவன் தன் நாயைத் தேடிக் கொண்டு சென்ருன். நெருப்புச் சாம்பலின் ஊடே அதன் காலடித் தடம் கண்டு பின்பற்றிச் சென்ருன். குளத்தின் கரையில் தன் அருமை நாய் சுருண்டு கிடப் பதைக் கண்டான். நெருங்கிச் சென்று பார்த்தபோது, அதன் உடல் முழுவதும் நனைந்திருப்பதையும், ஆங் காங்கே தீச்சுட்டுப் புண்கள் நிறைந் திருப்பதையும் கண்டான். அவனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த நாய் தன்னுயிரைக் கொடுத்திருக்கிற தென்ற உண்மையை அவன் புரிந்து கொண்டபோது, அவன் உள்ளத்தில் எழுந்த வேதனை இவ்வளவென்று சொல்ல முடியாது. உயி ரைக் கொடுத்துத் தன்னைக் காத்த அந்த நாயின் கன் றியைத் தேவங்ாதல்ை மறக்க முடிய வில்லை. அந்த நாய் செத்துச் சுருண்டுகிடந்த அதே 鷺 அந்தக் குளத்தின் கரையில் அதற்கொரு காயில் கட்டினன். அந்தக் கோயிலில் அந்த நாயின் உருவச் சிலையைச் செய்து வைத்தான். அதற்கு நாள் தோறும் பால் சோறு படைத்துப் பூசை நடத்த ஏற்பாடு செய்தான். தன் நன்றி மறவாமையைக் காட்ட அவளுல் அவ்வளவுதான் செய்ய முடிந்தது -பொன்னம்மா 86