பக்கம்:இளந்தமிழா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெலால் சென் பெலால் சென் என்பவன் வரலாற்றுத் தொடர்புடைய வடநாட்டு வீரர்களில் ஒருவன். நெஞ்சத் துணிவும் நிகரில்லாப் போர்த் திறனும் வாய்ந்தவன். பல போர்களிலே வெற்றி கண்டவன். அவன் ஒரு இளமங்கையைக் காதலிக் கிருன்; அவளும் அவனைக் காதலிக்கிருள். திருமணம் நடக் கிறது. பின்பு அவன் தன்னுடைய கோட்டையை விட்டுப் புதியதோர் போருக்குப் புறப்பட நேர்கிறது. காதலியின் நெஞ்சங் கலங்குகிறது; பாட்டு இங்கே தொடங்குகிறது. "நெஞ்சுகலங் காதேயடி கண்ணே-கண நேரமதில் வென்றுமீள்வேன் சொன்னேன் வெஞ்சமர மிதுபோலநேகம்-நான் வென்றதைநீ கண்டபின்னேன் சோகம்?" 'சென்றபின்பு நாளுமென்றன் நாதா-அமர்ச் சேதியிங் கனுப்பமுடி யாதா?” அன்றுமயில் நைந்துருக வேதான்-எண்ணி ஏதுரைப்பான் பெலால்சென், 'நீதான் கண்டறிய வகையொன்று செய்வேன்-நானும் கையிலென் புருவெடுத்துச் செல்வேன்; மண்டமரில் நான்மடிந்தால் மானே--உன வந்தடையும் அந்தப்புருத் தானே.” தந்துசொலிக் கந்துகத்தில் தாவ-அது தாண்டியது மங்கைமனம் நோவ.

          107
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/109&oldid=1360552" இலிருந்து மீள்விக்கப்பட்டது