பக்கம்:இளந்தமிழா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தியாகம்

      வேறு சந்தம்

"மக்களுக்காய் வாழவந்த மாண்புமிக்க தேவீ வந்துளதோ தண்ணிரங்கே எவ்வளவில் உரையாய்" "எக்கணமும் என்னிதயம் இருக்குமென்றன் நாதா என்றன்முழங் கால்அளவில் வந்துளதே தண்ணிர்'

"மக்களுக்காய் வாழவந்த மாண்புமிக்க தேவீ வந்துளதோ தண்ணிரங்கே எவ்வளவில் உரையாய் "எக்கணமும் என்னிதயம் இருக்குமென்றன் நாதா இடுப்பளவில் பெருகியிங்கே வந்துளதே தண்ணிர்

"மக்களுக்காய் வாழவந்த மான்புமிக்க தேவி வந்துளதோ தண்ணீரங்கே எவ்வளவில் உரையாய்' "எக்கணமும் என்னிதயம் இருக்குமென்றன் நாதா என்கழுத்தை எட்டிநல்ல தண்ணீர் உள்ளதிங்கே

"மக்களுக்காய் வாழவந்த மாண்புமிக்க தேவி வந்ததண்ணிர் எவ்வளவோ மேலும்நீயும் உரையாய்” அக்கணத்தில் விடையுமங்கே ஏதும்வந்த தில்லை அழுகையுடன் உவகையுமாய் அரசன் மக்கள் நின்ருர்.

நாகினிதேவி-பாதலத்தில் உள்ள தேவதை. மக்களுக் காய் வாழவந்த-இவ்வாறு ஒரே சொற்ருெடர் பல்லவி போலப் பலமுறை வருவது கதைப் பாட்டின் ஒர் இலக்கணம்.

           111
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/113&oldid=1360605" இலிருந்து மீள்விக்கப்பட்டது