பக்கம்:இளந்தமிழா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கிழவியும் ராணாவும்

    ராணா பிரதாப சிம்மன் ஓர் ஒப்பற்ற வீரன். அழியாப் புகழ் படைத்தவன். டெல்லிச் சக்கரவர்த்தியாகிய அக்பரை எதிர்த்து நின்று பல போர்கள் செய்தவன். ஆனால் பல முறை அவன் தோல்வியுற நேர்ந்தது. தனது சித்துர்க் கோட்டையையும் இழந்து ஆரவல்லி மலைத்தொடரிலே அலைந்து திரிந்தான். கோட்டையை மீட்பதே தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டிருந்தான். அதை அடைவதற்கு எவ்வளவோ துன்பங் களைத் தாங்கினான். இடையிலே அவன் சற்று உள்ளம் தளர்ந்து நாட்டை விட்டுச் சிந்து நதிக்கு வடக்கே சென்று விட முடிவு செய்து புறப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் உண்மையில் அவன் அவ்வாறு சென்று விடவில்லை. செல்லாமல் திரும்பியதைக் குறித்து ஒரு கற்பனை நிகழ்ச்சி பாடலிலே வருகின்றது.


    புயல் வெடித்துப் படிரெனப் பொங்கவும் 
    பொய்ய ருள்ளம்போல் வானம் கருத்தது; 
    உயர வானிடை நீந்திடும் புள்ளெலாம் 
    உயி ரொடுங்கிச் சிதறி யடங்கின.


    சூறைக் காற்றுப் புலியெனச் சீறியே 
    சுற்றிச் சாடி வளைத்து மரங்களைக்
    கூறும் பேயென நாற்றிசை ஆட்டிடக் 
    கொந்த ளித்ததக் காட்டுப் புறமெலாம்.

翼霹

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/118&oldid=1359446" இலிருந்து மீள்விக்கப்பட்டது