பக்கம்:இளந்தமிழா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடன யோகம்

குறிப்பு : ஸ்ரீமதி என்பவள் அழகும், ஆடற் கலைத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவள். அவள் அழகுக்கு அடிமையான அஜாதசத்ரு என்ற அரசன் புத்த பெருமானிடம் மாறாத பக்திகொண்ட ஸ்ரீமதியை ஒரு நாட்டியக்காரிதானே என்று அற்பமாக எண்ணி நெருங்கினான்.

தனது இச்சைக்கு உடன்படாதது கண்டு, சீற்றம் கொண்டு புத்த பெருமானின் சிலையைத் தரையிலே வைத்து அச்சிலையின் முன்பே நடனமாடும்படி அவளைப் பணிக்கிறான். அரசனுடைய ஆணையை மறுக்கமுடியாது ஸ்ரீமதி தனது தூய வாழ்க்கையையும், பக்தியையும் நாட்டியத்தின் வாயிலாகவே நிலைநாட்டிய நிகழ்ச்சியைப் பாடல் எடுத்து இயம்புகின்றது.

"இன்றே எனக்குநல் நாளம்மா-நீயும்
ஏன் முகம்வாடித் துடிக்கிறாய்
நன்றே நான் நாட்டியம் ஆடுவேன்-மன்னன்
நாணிட மெய்க்கலை காட்டுவேன் 1

புத்த மகான்மொழி தள்ளியே-நானும்
பொன்னுடல் விற்றிட வேண்டுமாம்
எத்தனை சூழ்ச்சிகள் அம்மம்மா!-என்றும்
இப்பழி என்னைத் தொடாதுகாண் 2

ஐயன்சிலை முன்னர் ஆடினால்-கொள்கை
அத்தனை யும்பறந் தோடுமாம்
பையக் கரந்தொடல் கூடுமாம்-இந்தப்
பார்த்திபன் காணும் கனாவிதே. 3



123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/125&oldid=1460171" இலிருந்து மீள்விக்கப்பட்டது