பக்கம்:இளந்தமிழா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நடன யோகம்


நாட்டியம் ஆடுதல் என்தொழில்-எனில்
நல்லறம் கைவிடல் வேணுமோ?
காட்டுவேன் என்கலை யாவையும்-நிலை
நாட்டுவேன் என் மனத்திண்மையும். 4

என்று மொழிந்தனள் ஸ்ரீமதி-அன்னை
இன்மலர்ப் பாதம்கண் ஒற்றினள் -
என்றும் அறியாத விந்தையாய்யாரும்
ஏங்கி வியந்திடும் வண்ணமாய் 5

ஒப்பனை செய்துகொண் டேஅவள்-மன்றில்
உள்ளவர் நோக்கி மயங்கிட
தப்பிய புன்மதி கொண்டவன்-அசாத
சத்துரு காணவே வந்தனள். 6

ஐயன் சிலையங்கு தரையிலே மன்னன்
அரியணை மேலுயர் பீடத்தில்;
பொய்மனம் கொண்ட களிப்புடன்-அவன்
புன்னகை செயதங் கமர்ந்தனன் 7

ஆடினள் நாட்டியம் அன்றுதான்-யாரும்
ஆஹாவெனச் சிலை ஆகவே
ஆடினள் ஆடினள் யோகமாம்-சாந்தி
ஐம்பொறி தன்னிலும் பொங்கவே 8

காணரும் காட்சியைக் கண்டனர்-மங்கை
காற்சிலம்பைத் தெறித் தாடினாள்
பூணும் நகைத் திறள் ஒவ்வொன்றாய்-அவள்
போக்கியே மன்னன் முன்வீசினாள்

9


126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/126&oldid=1460172" இலிருந்து மீள்விக்கப்பட்டது