பக்கம்:இளந்தமிழா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தெரு

இன்றுமனக் கோட்டையெலாம்
இடிந்ததுகண் ணீர்சொரிந்து
உன்றனிடம் விடைபெற்றே
ஊரறியா தேகிடுவேன் -தெருவேநான்...

வாழ்வுமிதோர் நெடுந்தெருவாம்
வாழ்ந்துமறைந் திடும்பொழுதில்
ஊழ்வினையற் றுரைத்திடுமோர்
ஒருசொல்லும் இதுவாமோ? -தெருவேநான்...


குறிப்பு : தெருவே நான் செல்கின்றேன், திரும்பியும் வந்துனை மிதியேன் என்ற முதல் இரண்டு வரிகளையும் ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் சேர்த்துப் பாடும் பொழுதுதான் கவிதையின் முழு உருவமும், அதன் உட்கருத்தும் நன்கு புலனாகும். அவ்வாறே பாடுக.



130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/132&oldid=1460177" இலிருந்து மீள்விக்கப்பட்டது