இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மானுடம்
ஒலிபலமிழற்றி ஓங்குநல் லன்பினால்
வலசையாம் வந்துவேடந் தாங்கலில்
வாழ்ந்திடும் திரும்பிடும்-மானிடன் அறிந்தும்
தாழ்வுறும் பலப்பல தடைகளே பேசிப்
பேதமையாலே உலகினேப் பிரித்தே
வாதனை படுவான் தானே வளர்ச்சியின்
சிகரமென் றறைவான் சிறுநெறி உழல்வான்
அகம்விரி வடையான்-ஆஹா மானுடம்!
குறிப்பு : காரிகை - யாப்பருங்கலக் காரிகை. காரிகை கற்றுப் பாடிய கவிதை அல்ல இந்த வடிவம்.
132