பக்கம்:இளந்தமிழா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 கடைசியாக, "காணம் என்ற நயமான பாடலைப்பற்றி இரண்டொரு வார்த்தை. காதலனைக் காணுதிருக்கும் போது காதலி 'அவரைச் சந்தித்தால் என்னுடைய காதலே யெல்லாம் அவர்மீது கொட்டுவேன். இப்படிச்சொல்லுவேன். அப்படிச் சொல்லுவேன்' என்றெல்லாம் விண்ணுணப் பேச்சுப் பேசுவாள். ஆணுல், அவனேக் கண்டவுடன், கூச்சம் வந்து அவள் வாயை அடைத்துக்கொள்ளு கிறது. இந்தப் பரிதாப நிலையை நினைந்து வருந்துகிருள். "கேற்றும் தயங்கினேன் இற்றைகாள் திண்ணமாய் உள்ளங் திறந்தென் அன்பெலா முரைப்பேன் என்றே நாள்தொறும் நாளெலாம் எண்ணியும் அக்தியிற் காதலர் வந்திடும் வேளையில் மொழியறியாது மூங்கையாய் குழல் வளை திருத்தி கிற்கிறேன் தோழி.” இந்தப் பாடலுக்குள்ளிருக்கும் மென்மையும் கூச்சமும் காதலின் திண்மையை அழகுபட எடுத்துரைக்கின்றன. இவ்வாருகப் பலப்பல இனிய பாடல்கள் அமைந்த கவிக்கோவையாக அமைந்திருக்கிறது 'இளந்தமிழா” என்ற நூல். இந்நூலைப் படித்துத் தமிழர்கள் உணர்வு வளம் பெறுவார்களாக.

               எஸ். மகராஜன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/16&oldid=1358802" இலிருந்து மீள்விக்கப்பட்டது