பக்கம்:இளந்தமிழா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூக்காரி மாமதுரைச் சிலையழகில் வடித்தெடுத்த நாசிமலர்; தேமதுரக் கிண்ணியெனக் சிரித்தவாய்: செவ்விதழ்கள்: பொற்கலைஞர் கைத்தொழில்கள்: புகுந்தறியா நற்செவிகள்: விற்புருவம் தான் வளைத்து விழியம்பு பாய்ச்சி வந்தாள். வானத்திலே தோன்றும் மணிவில்லும் கீழிறங்கி மானிலத்து நடந்ததுவோ? வடிவு கொண்ட பேரெழிலோ? சேரன் திருநாட்டுச் செல்வியரின் பொன்னிறத்தாள் மாரனுக்கு வாய்த்த புது வாளியெனத் தானசைந்தாள். செந்தாழம் பூமேனி சேர்ந்தபெரும் தனிச்சிறப்பால் கந்தைக்கும் ஒரழகு கன்னியவள் தான் கொடுத்தாள். முல்லைப்பூ என்ற சொல்லால் மோடி வித்தை தூவி அவள் ஒல்லையிலென்னுளம்பற்றி ஓடி மறைந்து விட்டாள். 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/34&oldid=1358783" இலிருந்து மீள்விக்கப்பட்டது