பக்கம்:இளந்தமிழா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்பார்த்தல்

[பல நாள் நாயகனைப் பிரித்திருக்கிறாள் ஒரு தலைவி. அவன் வெளியூர் சென்றிருக்கிறான். ஒரு நாள் காலையில் திரும்பி வருவதாக அவனிடமிருந்து சேதி கிடைக்கிறது. அந்த இன்ப நாளுக்கு முந்திய இரவிலே தலைவிக்கு உறக்கம் கொள்ளவில்லை. முழு நிலவு இரவெல்லாம் அவளை வருத்துகிறது. அதனால் நெட்டுயிர்த்து இரவைக் கழித்த தலைவி அதிகாலையிலே ஒளிகுன்றி மறையும் நிலவைப் பார்த்துக் கூறுவதாகக் கவிதை.]

மேனி வெளுத்து
மறையும் நிலாவே
நாளை யார் நின்செலவு
இரவெலாம் நோக்குவார்?

உலகம் குளிர்வித்து
என்னுளம் கட்டாய்
செல்லுதி!

பொற்கதிர்க் கற்றைகள்
கீழ்த்திசைப் படர்ந்தன;
நற்பொழுதுடன் என்
நாயகன் வருவரால்.



43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/45&oldid=1460151" இலிருந்து மீள்விக்கப்பட்டது