பக்கம்:இளந்தமிழா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சத்தியம்

சத்தியத்தைக் கடைப் பிடித்தார்

  காந்தியெனல் சரியல்ல 

சத்தியமே காந்திமகான்

  சத்தியமே அவர் வாழ்க்கை சத்தியமே அவர் வடிவம்
  தரணிக்கோர் புதுச்சோதி பித்தனொரு பேதையினால்
  பிணமாகச் சாய்ந்தவுடன் 

சத்தியம் செத்ததோ

  தருமம்ஒளி மங்கிற்றோ? எத்தனையோ துன்பங்கள்
  எத்தனையோ சிறைக்கூடம் இத்தேச விடுதலைக்காய்
  எமதண்ணல் தாம் பொறுத்தார் தாய்நாட்டின் பக்தியிலே
  தலைசிறந்தார் என்றாலும் தாய்நாடோ சத்தியமோ
  சத்தியமோ தாய்நாடோ எதுவேண்டும் எனக்கேட்டால்
  இமைப்போதும் தயங்காமல் சத்தியமே வேண்டு மென்பார் 
  சாந்தமுனி காந்திமகான் வையத்தே அன்பாட்சி
  வளர்க்கவந்த மெய்ஞானி மார்பகத்தே குருதி சிந்த
  மண்விழுந்தார் என்று சொன்னால் 

சத்தியம் செத்ததோ

  தருமம் ஒளி மங்கிற்றோ?
         60
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/62&oldid=1359742" இலிருந்து மீள்விக்கப்பட்டது