இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
⟨
வாழ்க காந்தி
குறிப்பு: காந்தி மகானின் பொன்னுடம்பு மறையுமுன் நடந்த காந்தி ஜெயந்தி விழாவொன்றில் பாடியது.
அன்புடன் அறமும் ஆட்சி
அவனியில் புரியுமாகில்
மன்பதை இன்ப மெய்தும்
வானவா் வாழ்க்கை கூடும்
என்பதோா் உண்மை தன்னை
இயம்பிய புத்தன் ஏசு
வன்பெரு மரபில் வந்த
மகாத்மனாம் காந்தி வாழ்க
சத்தியம் என்றும் ஓங்கும்
தா்மமே முடிவில் வெல்லும்
கத்தியும் வாளுந் தள்ளிக்
கருத்தினால் அஹிம்சை யேற்று!
அத்தனைப் பணிந்து வாழ்வீர்
அல்லலிங் கில்லை என்று
தத்தளித்த தமரில் நைந்த
தரணிக் குய்வு சொன்னாய்
சக்கரம் அன்னாட் கையில்
சமர்செயக் கீதம் பாடும்
சக்கரம் இன்றுன் கையில்
சாந்தியின் கீதம் பாடும்
⟩