பக்கம்:இளந்தமிழா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


எல்லோரையும் மகிழ்விக்கும் குயிற் பிள்ளையைக் கருங் காக்கை கொத்திக் கொன்றதே என வருந்துகின்றார்.

““வசந்தத்தின் தூதுவனை
மாஞ்சோலையின் னிசையை
கசந்த மனம் கொதித்து
காக்கை மடித்த தந்தோ!””

என்று பழிக்கின்றார். இன்னும் ஆற்றாமை தீரவில்லை. காக்கையின் கடுஞ்செயல் அவர் கருத்திற் பாய்ந்து உறுத்துகின்றது.

காக்கையே உன் நிறமும் கறுப்பு; நெஞ்சமும் கறுப்பு; மூக்கும் கறுப்பு; குரலும் கறுப்பு;

“கருவண்ணக் கருமூக்கி
கருமனத்துக் கருங்குரலி”

என்று ஏசுகின்றார்.

உலகம் போற்றும் உத்தமராகிய காந்தியடிகளை மனக்கோயிலில் வைத்து வழிபடும் தொண்டர் பல்லாயிரவருள் இக்கவிஞரும் ஒருவர். சத்தியத்தின் திருவுருவாய் விளங்கிய சாந்தமுனி காந்தி மகான் செந்நீர் சொரிந்து மடிந்தபோது இக் கவிஞர் மனம் இடிந்து பாடிய பாடல் இறவாப் பெருங்கவிதையாகும்.

“கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமிட்டு பாரதத்தாய்
கைத்தளையைக் களைந்தெறிந்த
அத்தனவன் திருமார்பில்
அறிவிழந்தான் சுட்டவுடன்
ஆ!ராமா எனும் போதே
சத்தியம் செத்ததோ
தருமம் ஒளி மங்கிற்றோ”

என்று அதிர்ச்சியால் மனங்கலங்கி மயங்குகின்றார். பின்பு தெளிவு பிறக்கின்றது; உண்மை புலனாகின்றது. அவர் இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் என்றெண்ணி ஆறுதல் அடைகின்றார்.

“காந்தி யெனும் சத்தியந்தான்
கார் ஈயக் குண்டேறிச்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/7&oldid=1314350" இலிருந்து மீள்விக்கப்பட்டது