பக்கம்:இளந்தமிழா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருளும் ஒளியும்

கதிரவனும் இருளரசியும்
எப்பொழுதும் பிரிவதே யில்லை
எப்பொழுதும் தோள் கோத்துக் கொண்டிருக்கிறார்கள்
எப்பொழுதும் முத்தமிட்டுக் கொண்டிருக்குறார்கள்
உலகத்தைச் சுற்றிப் பவனி வருகிறார்கள்
இரவுப் பகுதியில் நினுறால் ஞாயிறு தெரிவதில்லை
ஞாயிற்றுப் பகுதியில் நினுறால் இரவைக் காணோம்
ஆனல் அவர்கள் தழுவிக்கொண்டே யிருக்கிறார்கள்
அவர்களை வாழ்த்துகிறேன்!
இருவரில் யார் முன்னே செல்லுகிறார்கள்?
விண் மீன்களை அணிந்து,பிறைப் பொட்டிட்டு
இரவு முன்னே செல்லுகி்றாளா?
பறவைகள் பாடவும், உயிர்கள் ஒடியாடித் திரியவும்
ஞாயிறு முன் செல்கின்றானா
காலையில் இரவு கதிரவனை எதிர்கொண்டழைக்கின்றாள்
கதிரவன் சிரித்து வருகின்றான்
மாலையில்
சிவந்த மேகப் பட்டாடை உடுத்து
இருள் கதிரவனைப் பின் தொடர்ந்து நடக்கினுறாள்
அவள் உடையில் பொற்சரிகைகள், பொற்கரைகள்
மின்னுகின்றன.
கதிரவன் சிரித்துக்கொண்டுமுன்னல் போகினுறான்
அவர்கள் பிரிந்தார்களா?
இல்லவே இல்லை
உலகந்தான் அப்படி எண்ணி மயங்குகிறது
கதிரவன் வாழ்க
இரவரசி வாழ்க.

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/70&oldid=1359052" இலிருந்து மீள்விக்கப்பட்டது