பக்கம்:இளந்தமிழா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலே பற மனமே கற்பனைப் பாராசாரி மீதிவர்ந்து வானிலே பற! மேலே மேலே பற! இன்னும் மேலே பற! விண்ணிலேயுள்ள அமுதத்தை மண்ணுக்குக் கொண்டுவா. வாழ்க்கையின் குறுகிய பாதையிலே உழன்று கீழ் நோக்கி நில்லாதே;

உனது கனவுக் கண்களின் பரந்த நோக்கிலே
உலகம் உய்ந்திடுக. 

உனது பார்வை மேல் நோக்கியே உயர்க. நீல விசும்பிலே கழுகு உயர்ந்து பறக்கிறது: ஆனால் அதன் பார்வை யெல்லாம் நிலத்திலே. கழுகுப் பார்வை உனக்கு வேண்டா, மேலே நிமிர்ந்து பார். கழுகாகிலும் வானிலே பறக்கிறது. மண்ணுக்குக் கீழே சேற்றிலே நெளிகிறது புழுபார்வையெல்லாம் சேற்றிலே; வாழ்க்கையெல்லாம் புழுவுக்குக் கழுகு மேல். (சேற்றிலே)

நீ புழுவாகாதே; கழுகும் ஆகாதே. அப்பாலுக்கும் அப்பாலே உயர்ந்து செல். இன்பமெல்லாம் கொண்டுவா. எனக்கு எனக்கு என்று பேசாதே.
         75
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/77&oldid=1359108" இலிருந்து மீள்விக்கப்பட்டது